Singapore பொது தேர்தல்… 61 ஆண்டுகள் கடந்தும் கை விட்டு போகாத அதிகாரம்… !!!

நேற்று சிங்கப்பூரில் நடந்த பொது தேர்தலில் ஆளூம் பீப்பிள்ஸ் ஆக்‌ஷன் பார்ட்டி ஆமோக வெற்றி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2020, 12:24 PM IST
  • நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொரோனா (Corona) தொற்று பரவலை கருத்தில்கொண்டு தனிநபர் விலகலை கடைபிடித்து வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தினர்.
  • 2015ஆம் ஆண்டு தேர்தல் உடன் ஒப்பிடும்போது, அதிக வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன.
  • ஆளும் பீப்பிள்ஸ் பார்ட்டி 61 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது
Singapore பொது தேர்தல்… 61 ஆண்டுகள் கடந்தும் கை விட்டு போகாத அதிகாரம்… !!! title=

சிங்கப்பூர் (ஜூன் 11): சிங்கப்பூரில் (Singapore) சுமார் 61 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பீப்பிள்ஸ் ஆக்சன் பார்ட்டி (People’s Action Party) மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

அதில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (  10 தொகுதிகளை வென்றது. இன்று காலை வெளியான தேர்தல் முடிவுகளில், ஆளும் கட்சி தான் போட்டியிட்ட 93 தொகுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிங்கப்பூரில் ஆளும் பீப்பிள்ஸ் ஆக்சன் பார்ட்டி, 1959 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆளும் இந்த கட்சி 63.24 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

ALSO READ | சிங்கப்பூரில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடக்கும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர்  லீ ஹ்சியன் லூங் (Lee Hsien Loong) இந்த வெற்றி எதிர்பார்த்த அளவு குறிப்பிடத்தக்க வெற்றி இல்லை என்றாலும் 63 சதவிகித சதவீத வாக்குகள் என்பது நல்ல வெற்றி தான் என்று கூறினார் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இக்கட்சி 69.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதை ஒப்பிடும் போது 8.7 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன.

முன்னதாக நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொரோனா (Corona) தொற்று பரவலை கருத்தில் கொண்டு தனிநபர் விலகலை கடைபிடித்து வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தினர். வாக்களிக்க மக்கள் அதிக அளவில் வரிசையில் காத்திருந்ததால் வாக்களிப்பதற்கான நேரம் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது

ALSO READ | வாட்ஸ் ஆப் இமெயிலில் கூட சம்மன் வரும்.. இனி எங்கே போனாலும் தப்பிக்க முடியாது..!!

கோவிட்-19 (Covid-19) பரவலை கருத்தில்கொண்டு வாக்களிக்க வந்த மக்கள் மாஸ்க்குகள் அணிந்திருப்பதை காணமுடிந்தது. கொரோனா தொற்று காரணமாக மக்கள் தனிநபர் விழாவை சிறப்பாக கடைபிடிக்க வகை செய்ய, 2015 ஆம் ஆண்டு தேர்தல் உடன் ஒப்பிடும்போது, அதிக வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த தேர்தலில்  1,100 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. முந்தைய தேர்தலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 880 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பீப்பிள்ஸ் ஆக்சன் பார்ட்டி தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தல் வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

இந்த கட்சி வெற்றி பெற்றதை அடுத்து,  தற்போதைய பிரதமர் லீ ஹ்சியன் லூங் (Lee Hsien Loong) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க்கிறார்.

சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தை  லீ குவான் யூவின் (Lee Kuan Yew)  மகனான Lee Hsien Loong 2004  ஆம் ஆண்டு முதல் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார்.

Trending News