Russia Ukraine War: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி

உக்ரைனின் மிகப்பெரிய தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றின் உரிமையாளர், உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மைகோலேவில் ரஷ்ய தாக்குதலில் பலியானார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2022, 01:38 PM IST
  • ஒலெக்ஸி வடதுர்ஸ்கி விவசாய நிறுவனமான நெபுலான் நிறுவனத்தின் நிறுவனர்.
  • உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மைகோலேவில் மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய தாக்குதல்.
  • கோதுமை, பார்லி மற்றும் சோளம் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்றது.
Russia Ukraine War: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி title=

உக்ரைனின் மிகப்பெரிய தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான Nibulon என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஒலெக்ஸி வடதுர்ஸ்கி (Oleksiy Vadatursky) மற்றும் அவரது மனைவி இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மைகோலேவில் மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய தாக்குதலில் தம்பதியினர் பலியாயினர். 74 வயதான ஒலெக்ஸி வடதுர்ஸ்கி விவசாய நிறுவனமான நெபுலான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர்  இறந்து விட்டார் என்று மைகோலிவ் கவர்னர் விட்டலி கிம் கூறியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவரது மனைவி பெயர் ரைசா. ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் தங்கள் வீட்டில் இறந்தனர்.

நிபுலோன் ரஷ்யாவின் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தின் எல்லையில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமான மைகோலாய்வில் அமைந்துள்ளது. இப்பகுதி கோதுமை, பார்லி மற்றும் சோளம் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்றது. மேலும் இங்கு கப்பல் கட்டும் தளம் உள்ளது. கருங்கடலில் உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகமான ஒடெசா துறைமுகத்திற்கு செல்லும் பிரதான சாலையில் இந்த நகரம் அமைந்துள்ளது.

மேலும் படிக்க | Bizarre! பாகிஸ்தானில் எருமையை விட மலிவான விலையில் விற்கப்படும் சிங்கங்கள்

மைகோலைவ் பிராந்திய தலைவர் விட்டலி கிம் கூறுகையில், விவசாயம் மற்றும் கப்பல் கட்டும் தொழிலின் வளர்ச்சிக்கு வடதுர்ஸ்கியின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. கோதுமை ஏற்றுமதியை மீண்டும் தொடங்க உக்ரைனின் முயற்சிகளுக்கு அவரது மரணம் பெரும் அடியாக இருக்கும்.

வடதுர்ஸ்கியின் மரணம் உக்ரைனுக்கு பெரும் இழப்பு என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். நவீன தானிய சந்தையை உருவாக்க வடதுர்ஸ்கி பணிபுரிந்து வந்ததாக அவர் கூறினார். அதில் டிரான்ஸ்ஷிப்மென்ட் டெர்மினல்கள் மற்றும் லிஃப்ட் நெட்வொர்க் அடங்கும்.

ரஷ்ய ஏவுகணை ஒன்று தொழிலதிபரின் படுக்கையறைக்குள் நுழைந்ததையடுத்து வடதுர்ஸ்கி ரஷ்ய இராணுவத்தால் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாக உக்ரைன் சந்தேகிக்கின்றது. பிப்ரவரி 24 முதல் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த போர் தொடங்கி 6 மாதங்கள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில், கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகத்தில் ஆளில்லா விமானம் வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்தனர், ரஷ்ய கடற்படையின் நினைவாக கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவஸ்டோபோல் நகரில் உள்ள கடற்படை தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ட்ரோன் குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ரஷ்ய படைகளை விரட்ட விரும்பும் உக்ரேனிய கிளர்ச்சியாளர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓல்கா கோவிடிடி, ரஷ்ய செய்தி நிறுவனமான 'RIA-Novosti' இடம்  தெரிவிக்கையில், ஆளில்லா விமானம் செவஸ்டோபோலில் இருந்தே ஏவப்பட்டது என்று கூறினார். இச்சம்பவம் தீவிரவாத செயலாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் படிக்க | இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News