சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

கருந்துளையின் ஈர்ப்பு விசை நாம் கணிக்க முடியாத அளவாக இருக்கும். இதனால், அது தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை ஈர்த்து அளவில் பெரிதாகிக்கொண்டே செல்லும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2023, 09:14 AM IST
  • விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ள இந்த மிகப்பெரிய கருந்துளையை சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரியது.
  • சூரியனைப் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்ததுதான் பால்வெளி அண்டம்.
  • நட்சத்திரங்கள் கூட கருந்துளையாக மாறும்போது அதன் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.
சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்! title=

பிரமாண்டமான பிரபஞ்சத்தில்  இன்று வரை மிகப்பெரிய ரகசியமாகவும் மர்மமாகவும் உள்ள ஒரு   பொருள் கருந்துளை என்று தான் சொல்ல வேண்டும். இதில் அப்படி என்ன மிகப்பெரிய ரகசியம் உள்ளது என்று கேட்டால், இது இயற்பியலுக்கு அப்பாற்பட்டு செயல்படக்கூடியது. தற்போது இருக்ககூடிய எந்த இயற்பியல் விதிகளும் இந்த கருந்துளைக்கு பொருந்தாது என்பது தாம் மிகவும் ரகசியமான மர்மமான விஷயமாக உள்ளது. நாம் வசிக்கும்  இந்த பூமி சூரிய குடும்பத்தைச் சார்ந்தது. சூரியனைப் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்ததுதான் பால்வெளி அண்டம். நமது விண்மீன் மண்டலத்தின் மையத்தில் பிரம்மாண்டமான கருந்துளை இருப்பதாக அறிவியல் கூறும் நிலையில், வான்வெளி விஞ்ஞானிகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கருந்துளையை கண்டுபிடித்துள்ளனர். 

ஈர்ப்பு விசை

சூரியனைவிட மூன்று மடங்கு பெரிய அளவில் இருக்கும் நட்சத்திரங்கள் கூட கருந்துளையாக மாறும்போது அதன் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். இவற்றின் ஈர்ப்பு விசை நாம் கணிக்க முடியாத அளவாக இருக்கும். இதனால், அது தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை ஈர்த்து அளவில் பெரிதாகிக்கொண்டே செல்லும். நமது பால்வெளி மண்டலத்தில் மட்டும் சில நூறு மில்லியன் கருந்துளைகள் இருக்கும் எனக் கணித்துள்ளனர் அறிவியலாளர்கள்.

சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரியது

இந்நிலையில், விஞ்ஞானிகள்  தற்போது கண்டுபிடித்துள்ள இந்த மிகப்பெரிய கருந்துளையை சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இது இது வரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரிய கருந்துளையாக கருதப்படுகிறது. இந்த கருந்துளையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவின் முழுமையான ஆராய்ச்சி தகவல்கள் ராயல் அஸ்ட்ரோனாமிகல் சொசைட்டியின் மாதாந்திர அறிவிப்புகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விண்வெளியில் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ள இத்தனை கோடியா?

 

கருந்துளையின் ஆராய்ச்சி

இந்த மிகப்பெரிய கருந்துளையின் ஆராய்ச்சியின் ஆசிரியரும், இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் டாக்டர் ஜேம்ஸ் நைட்டிங்கேல் கருந்துளையின் அளவைப் பற்றி ஒரு முக்கிய அறிக்கையை வழங்கியுள்ளார். ஒரு விண்வெளி விஞ்ஞானியாக இருந்தாலும், இந்த கருந்துளை எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருந்தது கூறியுள்ளார்.

பிரபஞ்சத்தில் பல பெரிய கருந்துளைகள் உள்ளன

ஆராய்ச்சிக் கட்டுரையை வழங்கிய ஜேம்ஸ் நைட்டிங்கேல் அதன் பரந்த தன்மையைப் பற்றி கூறுகையில், இந்த கருந்துளை இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கருந்துளைகளில் ஒன்றாக இருக்கலாம், ஏனெனில் கருந்துளைகள் இதை விட பெரியதாக இருக்க முடியாது என்று இயற்பியலாளர்கள் கருதுகின்றனர். அவர் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு அணிக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. இது போன்ற பல மாபெரும் கருந்துளைகள் பிரபஞ்சத்தில் பரவியுள்ளன .அவை சூரியனின் நிறை 10 பில்லியனிலிருந்து 40 பில்லியன் மடங்கு பெரியவை.

மேலும் படிக்க | நிலவில் விரைவில் மனிதர்கள் குடியேறலாம்... விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நம்பிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News