டிரம்புக்கு வாக்களிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மாகாண ஆளுநர் யார் தெரியுமா?

மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் மரணித்த சோகத்திற்கு மத்தியில், வழக்கத்தைவிட வித்தியாசமான சூழலில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2020, 10:33 PM IST
  • நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
  • அமெரிககாவில் அதிபர் தேர்தலுடன் இணைந்து, நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றுக்கான தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது
டிரம்புக்கு வாக்களிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மாகாண ஆளுநர் யார் தெரியுமா? title=

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தியிருக்கும் வித்தியாசமான சூழ்நிலையில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. எனவே இந்தத் தேர்தலில் குடிமக்கள் பலரும் தபால் மூலம் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி வாக்களித்துள்ளனர். இந்த முறை வாக்குப் பதிவும் அதிக அளவில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அதிபர் தேர்தலுடன் சேர்த்து  அமெரிக்க மாகாண ஆளுநர்களுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் டிரம்புக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன்.  

டிரம்புக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று வெர்மாண்ட் மாகாண ஆளுநரும்,  அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஃபில் ஸ்காட் தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டுக்கு நாடு தேர்தல் நடைமுறை வித்தியாசப்படும். அமெரிக்க அதிபர் தேர்தலின் சில சுவாரசியமான தேர்தல் அம்சங்களை தெரிந்துக் கொள்வோம்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறுவது வழக்கம்.  
வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகளில் எவ்வளவு ஒரு வேட்பாளருக்கு கிடைக்கிறது என்பதன் அடிப்படையில் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அமெரிககாவில் அதிபர் தேர்தலுடன் இணைந்து, நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றுக்கான தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.  அதுமட்டுமல்ல, வெவ்வேறு மாகாணங்களில் சில குறிப்பிட்ட சட்டங்கள் தொடர்பான வாக்கெடுப்புகளும் நடைபெறுகின்றன.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News