தமிழகத்தை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டுள்ள இலங்கை தூதர்?

இலங்கையை தன்வசப்படுத்தி இந்தியாவிற்கு எதிராக பல்வேறு திட்டங்களை சீனா திட்டமிட்டு தீட்டி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 12, 2021, 09:04 PM IST
தமிழகத்தை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டுள்ள இலங்கை தூதர்? title=

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இலங்கை நாட்டின் தூதுவராக  அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவால் வெங்கடேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் மிக முக்கிய பொறுப்பில் அங்கம் வகித்து வருகிறார். தென்னிந்தியாவின் வளர்ச்சித் திட்ட பணிகள் பற்றி அறிந்து கொள்வதற்காக கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்களை சந்தித்துள்ளார்.

பின்னர் தமிழகத்திற்கு வருகை தந்து வெங்கடேஸ்வரன் தலைமைச் செயலாளர் இறையன்புவையும் சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் அங்கிருந்து காரைக்கால் சென்று அங்குள்ள துறைமுகத்தை பார்வையிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கையில் சீன துறைமுகத்தை கட்டமைத்து வருகின்ற இந்நேரத்தில் இலங்கையை தன்வசப்படுத்தி இந்தியாவிற்கு எதிராக பல்வேறு திட்டங்களை சீனா திட்டமிட்டு தீட்டி வருகிறது.

இதன் காரணமாகத்தன் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை மேம்படுத்துவதற்காக அதன் நட்பு நாடுகளில் ஒன்றான இலங்கையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை தீவிரப்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா அந்த நாட்டில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் சேவகராக செயல்படும் வெங்கடேஷ் இந்தியாவை உளவு பார்க்க இலங்கைக்கு தூதுவராக நியமனம் செய்யப்பட்டிருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சீனாவின் நட்பு நாடு என்ற முறையில் இலங்கை அதிபர் தமிழகத்திலுள்ள தூத்துக்குடி மற்றும் காரைக்கால் துறைமுகம் சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த இரண்டு துறைமுகங்களின் கட்டமைப்புகள் மூலம் இந்தியாவை பலவீனப்படுத்த பல்வேறு முயற்சிகளில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவின் கைப்பாவையாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் காரைக்கால் துறைமுகத்தில் ஆய்வு நடத்துவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும்.

இதன் மூலம் இலங்கைத் தூதராக வெங்கடேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டிரப்பது சீனாவுக்கு உளவு சொல்வதற்காகவே என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் கொன்று குவிக்க காரணமாக இருந்த சவேந்திர சில்வா, மற்றும் கமல் குணரன் ஆகியோரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் தான் தற்போது இந்தியாவிற்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் வெங்கடேஷ்வரன் ஆவார்.

அதேபோல் 2009 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளுக்கு எங்கிருந்து உணவுப்பருட்கள் வருகின்றது. அவர்களுடைய போக்குவரத்திற்கான பெட்ரோல், டீசல் எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பான ரகசியங்களை இலங்கை ராணுவத்திற்கு அவ்வப்போது தகவல் தந்து தனக்குத் தேவையான சன்மனங்களை பெற்று வெங்கடேஷ்வரன் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொண்டார்.

தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இங்கு நடக்கக் கூடிய பல விசயங்களை அலுவல் ரீதியாகவும், ரகசியமாகவும் இலங்கை அரசுக்கு தெரிவிக்க ராஜபக்சே தமிழகத்தை உளவு பார்க்க வெங்கடேஷை தனது கைப்பாவையாக வைத்திருக்கிறார். இந்நியமனம் தொடர்பாக பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட சென்னை, இலங்கை தூதரக அதிகாரிகள் இதுவரை இந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் (Sri Lanka foreign service) நியமனம் மூலமே தேர்வு செய்யபட்டுள்ளார்கள்.

கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் தமிழர்களாக இருந்த போதிலும் ராஜபக்ச அரசுக்கு அரசியல் சட்டத்தை மீறி ஒத்துழைப்பு வழங்கவில்லை. இத்தனை தகுதியான தமிழர்கள் இருந்த போதும் (sriLanka foreign service) தகுதி இல்லாத வெங்கடேஸ்வரன் என்ற நபரை இலங்கை தூதராக நியமிக்கப்பட்டிருப்பதுக்கு பின்னால் பல ரகசியங்கள் அடங்கியுள்ளது தெரிகிறது. இந்த நியமனம் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு ரகசியங்களை கண்காணிக்க இலங்கை அரசு விரும்புகிறது.

சமீபத்தில் திருச்சியில் உள்ள கோத்தகிரி சர்க்கரை ஆலையில் இலங்கை தூதர் வெங்கடேஷ் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். திருச்சியில் உள்ள இந்த நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்ட பிறகு இலங்கை தூதர் வெங்கடேஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடும் போது இலங்கை ஜனாதிபதி வழிகாட்டுதலின் பேரில் இந்நிறுவனத்தை பார்வையிட வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் வெங்கடேஷ் ஆய்வை நடத்தி முடித்திருக்கிறார்.

முட்டியாரா அனல் மின் நிலையத்திற்கு நேரில் சென்ற வெங்கடேஷ் அங்கு நடைபெற்று வரும் ஆய்வு பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். இப்படி தமிழகத்தில் பல இடங்களுக்கு சென்று வெங்கடேஸ்வரன் இங்குள்ள தகவல்களை இலங்கைக்கு உளவு சொல்கிறார்.

அரசியலமைப்பு சட்டத்தை மீறி இந்தியாவிற்கான இலங்கை தூதராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு பின்னால் பல ரகசியங்கள் இருப்பதாக சந்தேகங்கள் தோன்றுகிறது. சீனாவின் கைப்பாவையாக செயல்படும் இலங்கை-இந்திய உள்கட்டமைப்பு பணிகள் கண்காணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News