எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்

டிவிட்டர் நிறுவனத்தை $44 மில்லியனுக்கு வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்,  நிறுவனத்தில் ஆட்குறைப்பு குறித்து வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 29, 2022, 01:58 PM IST
எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள் title=

டிவிட்டர் நிறுவனத்தை $44 மில்லியனுக்கு வாங்கியுள்ள டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் வங்கிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ​​ட்விட்டரின் வருமானத்தை அதிகரிக்க, ஆட் குறைப்பு செய்வது பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், எலான் மஸ்க், வங்கியாளர்களுடனான உரையாடலில், மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில், " ஆட்குறைப்பு" பற்றி விவாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தில் ஆட் குறைப்பு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் கருத்து  ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், முன்னதாக, பராக் அகர்வால், 'தற்போது ஆட்குறைப்பு ஏதும் இருக்காது' என்று ஊழியர்களிடம் கூறியிருந்தார். 

மேலும் படிக்க | எலான் மஸ்க் ட்விட்டருக்கு மிக பொருத்தமான நபர்: ஜாக் டார்ஸி

முன்னதாக, அமெரிக்காவில், கேபிடல் ஹில் வன்முறையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டரின் மடிக்கணினி தொடர்பான குறிப்பிட்ட பதிவுகளை தணிக்கை செய்ததற்காக ட்விட்டரின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மீது எலான் மஸ்க் விமர்சனத்தை முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர்  நிறுவனத்தை மேம்படுத்தவும் மாற்றவும் தனது முழு குழுவும் தொடர்ந்து பணியாற்றும் என்று அகர்வால் கூறினார். அவர் வியாழக்கிழமை பதிவிட்ட ஒரு ட்வீட்டில், 'ட்விட்டரை சரியான திசையில் திருப்பவும், சேவையை வலுப்படுத்தவும் நான் இந்த பணியை மேற்கொண்டேன். தொடர்ந்து நிறுவனத்தின் மேம்பட்டிற்காக உழைக்கும் மக்களை நினைத்து பெருமை கொள்கிறோம்.

மேலும் படிக்க | ட்விட்டரின் எதிர்காலம் உறுதியற்றது.. ஊழியர்களிடம் மனம் திறந்த பராக் அகர்வால்

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய பிறகு பராக் அகர்வால் ஊழியர்களுடன் பேசும் ஆடியோ கிளிப் ஒன்று வெளியான நிலையில், எலன் மஸ்க் ஊழியர்களின் பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பார் என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News