Winston Churchill Cigar: 80 ஆண்டுகளுக்கு முன்பு சர் வின்ஸ்டன் சர்ச்சில் புகைத்த ஒரு சுருட்டு கண்ணாடி குடுவையில் கண்டுபிடிக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஊடக அறிக்கையின்படி, பாதி புகைபிடித்த சுருட்டு முதலில் 1944இல் மொராக்கோவின் ரபாத்தில் உள்ள தூதரக ஜெனரல் ஆக இருந்த ஹக் ஸ்டோன்ஹெவர்-பேர்ட் என்பவருக்கு பிரிட்டனின் போர்க்கால பிரதமராக இருந்த சர்ச்சிலால் கொடுக்கப்பட்டது.
ரூ. 92 ஆயிரம் மதிப்பு
தூதரக ஜெனரல் ஹக் ஸ்டோன்ஹெவர்-பேர்டின் குடும்பத்தினர் கூறுகையில், அவர் 1973இல் இறக்கும் வரை அவர் சுருட்டை பொக்கிஷமாக வைத்திருந்தார், இப்போது அதை விற்க வேண்டிய நேரம் என்று அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். வரும் ஜூன் 16ஆம் தேதி டெர்பிஷையரைச் சேர்ந்த ஹான்சன்ஸ் ஏலதாரர் நிறுவனத்தால் இந்த நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால், 900 பவுண்டுகள் (ரூ. 92,078) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான முயற்சியில் தோல்வியடைந்த வடகொரியா
சுருட்டுகளை பரிசளிப்பவர்
"கண்ணாடி ஜாடிகளில் என்ன மாறுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது பிரிட்டனின் மிகவும் பிரபலமான பிரதமர் மற்றும் இரண்டாம் உலகப் போருடன் இணைக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும்" என்று ஹான்சன்ஸ் ஏலதார நிறுவினத்தின் உரிமையாளர் சார்லஸ் ஹான்சன் தெரிவித்துள்ளார். "சர்ச்சில் தனது சுருட்டுகளை விரும்புவதற்குப் புகழ் பெற்றவர். எப்போதாவது தனக்கு எந்த வகையிலும் உதவியவர்களுக்கு சுருட்டுகளை பரிசாக வழங்கினார்," என்று அவர் மேலும் கூறினார்.
விருந்தில் புகைத்தது
ஸ்டோன்ஹெவர்-பேர்ட் 1973 இல் இறந்தார். அதன்பின், அந்த சுருட்டு அவரின் அடுத்தடுத்த தலைமுறைகள் வழியாக பாதுகாக்கப்பட்டது."எனது தாத்தா, பாட்டி ஆகியோர் சிறந்த சர்ச்சில் ரசிகர்களாக இருந்தனர். அவர்கள் சர் வின்ஸ்டன் புகைப்படம் மற்றும் நகைச்சுவையான உருவத்துடன் சுருட்டை காட்சிக்கு வைத்திருந்தனர். அவை பொருட்களுடன் தற்போது ஏலத்தில் விற்கப்படுகின்றன," என்றார். ஸ்டோன்ஹெவர்-பேர்ட் ஜாடியில் ஒரு லேபிளைச் சேர்த்துள்ளார். அதில் வின்ஸ்டன் சர்ச்சில் முன்னாள் தூதரகத்தால் வழங்கப்பட்ட இரவு விருந்தில் சுருட்டு புகைத்ததாகக் குறிப்பிடுகிறது.
இரு முறை பிரதமர்
1940 முதல் 1945ஆம் ஆண்டு வரை, 1951 முதல் 1955ஆம் ஆண்டு வரை என இரண்டு முறை பிரிட்டனின் பிரதமராக இருந்த சர்ச்சில், ஜனவரி 1965இல் தனது 90 வயதில் இறந்தார். அரசு இறுதிச் சடங்கு செய்யப்பட்ட மூன்று பிரதமர்களில் இவரும் ஒருவர்.
மேலும் படிக்க | கோடிக்கணக்கில் உயிரிழப்பு... இருந்தாலும் கோடியில் புரளும் சிகரெட் கம்பெனிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ