ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரால் உலக நாடுகள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல் நிஜமாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்பின்லாந்து-நார்வே எல்லையில் 11 அணுகுண்டு வீசுவதற்கான தாக்குதல் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளார். பிரிட்டன் பத்திரிகையான ‘தி மிரர்’ செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இந்த தகவலை முன்வைத்துள்ளது. புடினின் ராணுவ ஜெனரல் மேற்கத்திய நாடுகள் மீது குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் கூற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏனெனில் புட்டினும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரும் ரஷ்யா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்று மறைமுகமாக கூறியுள்ளனர்.
புடினின் உத்தரவின் பேரில், 11 Tu-160 அணு குண்டுவீச்சு விமானங்கள் ரஷ்யாவின் ஒலென்யா விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கோலா விமான தளத்தில் நான்குTu-95 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நார்வேயின் உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான Faktisk.noவும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. "செயற்கைக்கோள் படங்கள் நார்வேயில் இருந்து 20 மைல் தொலைவில் 11 அணு குண்டுவீச்சு விமானங்கள் இருப்பதைக் காட்டுகின்றன" என்று நார்வேயின் இணைய தளம் கூறியது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேலிய செய்தித்தாள் ‘ஜெருசலேம் போஸ்ட்’ கூட ஒலென்யா விமான தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக கூறியது. பின்னர் இஸ்ரேலின் உளவு நிறுவனமான ‘இமேஜ் செட்’ இதை உறுதி செய்தது.
மேலும் படிக்க | அணு ஆயுத தாக்குதல் அச்சம்; அயோடின் மாத்திரைகளை வாங்கி குவிக்கும் உக்ரேனியர்கள்!
அணு ஆயுத தாக்குதல் விமானங்கள் பொதுவாக மாஸ்கோவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள ஏங்கலின் விமான தளத்தில் நிறுத்தப்படும் நிலையில், தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டு பின்லாந்து மற்றும் நார்வே எல்லைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் ஐரோப்பா மீது அணுவாயுத தாக்குதலுக்கான சாத்தியமும் அதிகரித்து வருகிறது.
இந்த அணு குண்டுவீச்சுகளில் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டதா அல்லது வழக்கமான ஆயுதங்களா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் அவை இரண்டு வகையான ஆயுதங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை, ஒலென்யா விமான தளத்தில் அணு குண்டுவீச்சு விமானங்கள் இல்லை.
மேலும் படிக்க | அணு ஆயுத போரை தூண்டுகிறார் ஜோ பைடன்... கட்சியிலிருந்து விலகிய துளசி கப்பார்ட்!
மேலும் படிக்க | அணு ஆயுதத்தை பயன்படுத்தினால்... ரஷ்யாவை எச்சரிக்கும் G7 நாடுகள்!
மேலும் படிக்க | ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரரின் உருக்குலைந்த தோற்றம்.. உலகை உறைய வைத்த புகைப்படம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ