போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்

உக்ரைன் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தின் லுகான்ஸ்க் பகுதியில் உள்ள கடைசி லிசிசான்ஸ்க் மூலோப ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிலையில், நேற்று இந்த பகுதியை ரஷ்யா கைப்பற்றியதாக செய்திகள் வெளியானது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 4, 2022, 08:09 PM IST
  • ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஞாயிறன்று கியேவில் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார்.
  • போரில் கடுமையான சண்டைகளுக்குப் பிறகு லிசிசான்ஸ்க் ரஷ்யா வசம் சென்றுள்ளது.
  • லிசிசான்ஸ்கின் இரட்டை நகரமான செவெரோடோனெட்ஸ்கை ரஷ்யப் படைகள் கைப்பற்றின.
போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள் title=

கடந்த நான்கு மாத காலங்களாக ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில்,  முக்கிய திருப்பு முனையாக, உக்ரேனிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3), லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ ரீதியாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமான லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரக்கணக்கான கடுமையான சண்டையைத் தொடர்ந்து உக்ரைன் படைகள் பின்வாங்கியது. 

ரஷ்ய பாதுகாப்பு  அமைச்சர் செகேய் ஷோய்கு,  நேற்றே,  லிசிசான்ஸ்க் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்தார். எனினும்  கோரிக்கையை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மறுத்தார். எனினும், உக்ரேனிய படைகள்  பின்வாங்கயது பற்றிய இராணுவ அறிக்கை பின்னர் சில மணிநேரங்களில் வந்தது.முன்னதாக ரஷ்ய இராணுவம் நகரத்தை சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படுவதை உக்ரைன் நிராகரித்தது. ஆனால் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் லிசிஸான்ஸ்க் நகரம் ரஷ்யாவின் கட்டுபாட்டில் செல்லக் கூடும் என்பதை முன்னரே ஒப்புக்கொண்டார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், லிசிசான்ஸ்க் கைப்பற்றப்பட்டது ரஷ்யாவிற்கு ஒரு பெரிய திருப்புமுனையை எனலாம். பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யப் படைகள் தலைநகர் கீவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டன. பின்னர் கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றுவதில் ரஷ்யா கவனம் செலுத்தியது. டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவு படைகள் ஏற்கனவே ஆக்டிவ் ஆக இருந்தன.

மேலும் படிக்க | உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்; 18 பேர் பலி

உக்ரேனிய படை வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, படைகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது என உக்ரேன் தரப்பில் கூறப்படுகிறது. பல வாரங்களாக நடந்த கடும் சண்டையைத் தொடர்ந்து கடந்த வாரம் லிசிசான்ஸ்கின் இரட்டை நகரமான செவெரோடோனெட்ஸ்கை ரஷ்யப் படைகள் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள லுகான்ஸ்க் பகுதியில் உள்ள கடைசி பெரிய நகரமாக லிசிசான்ஸ்க் இருந்தது.  கடந்த வாரம் சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் எதிர் கரையில் உள்ள லிசிசான்ஸ்கின் துணை நகரமான செவெரோடோனெட்ஸ்க்கை ரஷ்யப் படைகள் ஏற்கனவே கைப்பற்றியுள்ளன. போரில் கடுமையான சண்டைகளுக்குப் பிறகு ரஷ்யா வசம் சென்றுள்ளது.

கிவ் நகரை கைப்பற்றத் ரஷ்யா  தவறிய நிலையில், தாக்குதலின் மையமாக மாறிய டான்பாஸ் பகுதிக்குள் நுழைய  முயற்சிக்கும் ரஷ்யப் படைகளுக்கு லிசிஸான்ஸ்க் நகரை கைப்பற்றியுள்ளது ஒரு பெரிய வெற்றி ஆகும்.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஞாயிறன்று கியேவில் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பின் போது கவச வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் உட்பட மேலும்  ஆயுதங்கள் வழங்குவோம் எனக் கூறி, இராணுவ ஆதரவை உறுதியளித்திருந்த நிலையில், இந்த முக்கியமான திருப்புமுனை நேரிட்டுள்ளது. 

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News