அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல் நடத்தியது உக்ரைனா ரஷ்யாவா?

Zaporizhzhia Nuclear Plant Attack: ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல் நடத்தியது யார்? உக்ரைனா இல்லை ரஷ்யாவா? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2022, 12:22 PM IST
  • ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல்
  • தாக்குதலுக்கு காரணம் உக்ரைனா இல்லை ரஷ்யாவா?
  • இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டு
 அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல் நடத்தியது உக்ரைனா ரஷ்யாவா? title=

ரஷ்யாவின் படையெடுப்பால் பல மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் உக்ரைனின் சிக்கல்கள் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. வெள்ளிக்கிழமையன்று ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல்கள் தொடர்பாக உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றன் மீது மற்றொன்று குற்றம் சாட்டுகின்றன. உக்ரேனிய அணுமின் நிலையத்தின் மீது ஷெல் துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றது. ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியாவை தாக்கியதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டும் உக்ரைன், இந்த "பயங்கரவாதச் செயலுக்கு" மாஸ்கோ பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் உக்ரைன் தான், இந்த ஆலையின் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறுகிறது.

உக்ரைனின் அரசு நடத்தும் அணுமின் நிலையங்களின் ஆபரேட்டரான Energoatom இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "அணு உலை அமைந்துள்ள பகுதியில், ஆலையின் தளத்தில் மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.அதில், "ஹைட்ரஜன் கசிவு மற்றும் கதிரியக்கங்கள் கசியும் அபாயங்கள் உள்ளன என்பதோடு, தீ ஆபத்தும் அதிகமாக உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க |  ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி

"உக்ரேனிய ஆயுதப் பிரிவுகள் ஜபோரிஜியா அணுமின் நிலையம் மற்றும் எனர்கோடர் நகரத்தின் பிரதேசத்தில் மூன்று பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டன" என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

அணு ஆயுதப் பயங்கரவாதச் செயல்களைச் செய்து வரும் ஜெலென்ஸ்கி ஆட்சியின் குற்றச் செயல்களைக் கண்டிக்குமாறு சர்வதேச அமைப்புகளை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று ரஷ்யா கூறுகிறது.

''உக்ரேனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாஸ்கோ ஆலையை இராணுவ தளமாகப் பயன்படுத்துகிறது, ஏனெனில் அவர்கள் தற்செயலாக அணு உலையை தாக்கலாம் அல்லது சேமிப்பில் உள்ள அதிக கதிரியக்கக் கழிவுகளைத் தாக்கக்கூடும் என்பதால், அவர்கள் அங்கிருந்து தாக்குதல் நடத்தும்போது, நாங்கள் திருப்பிச் சுட முடியாது என்று அவர்கள் நினைக்கின்றனர்” என்று உக்ரைன் கூறுகிறது.

மேலும் படிக்க | Bizarre! பாகிஸ்தானில் எருமையை விட மலிவான விலையில் விற்கப்படும் சிங்கங்கள்

சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி, சுவிஸ் பேப்பர் டேஜஸ்-ஆன்ஸீகர் நிறுவனத்திடம், ஆலையுடனான தொடர்பு "பலவீனமானது" என்றும், தகவல் தொடர்பு தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கூறினார்.

பிப்ரவரி 24 முதல் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த போர் தொடங்கி 6 மாதங்கள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, மார்ச் மாதத்தில் மாஸ்கோவின் துருப்புக்கள் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டன,இந்த ஆலையின் சுற்று வட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்திலேயே வசித்து வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியில் மோதல் அதிகமானால், சோர்னோபில் அணு ஆலையில் ஏற்பட்டது போன்று மற்றுமொரு பேரழிவு ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.

மேலும் படிக்க | இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News