வூஹான் ஆய்வகத்தில் உருவானதா கொரோனா வைரஸ்? ஆதாரங்கள் இல்லை! கைவிரித்த அமெரிக்கா

Wuhan vs Coronavirus: வுஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிக்க நேரடி ஆதாரம் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 24, 2023, 11:49 AM IST
  • வுஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதா?
  • நிரூபிக்க நேரடி ஆதாரம் இல்லை
  • அமெரிக்க உளவுத்துறையின் கூற்று
வூஹான் ஆய்வகத்தில் உருவானதா கொரோனா வைரஸ்? ஆதாரங்கள் இல்லை! கைவிரித்த அமெரிக்கா title=

சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் நடந்த எந்தவொரு சம்பவத்திலும் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் எந்த நேரடி ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகம் (ODNI) வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க உளவுத்துறை அமைப்பு, வூஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் வெளிப்படுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்றாலும், அங்கிருந்துதான், வைரஸ் உருவானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.

"மத்திய புலனாய்வு முகமை மற்றும் மற்றொரு நிறுவனத்தால் COVID-19 தொற்றுநோயின் துல்லியமான தோற்றத்தை கண்டறிய முடியவில்லை, ஏனெனில், வைரஸ் இயற்கையாக உருவானது மற்றும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற இரண்டு கருதுகோள்களும் குறிப்பிடத்தக்க அனுமானங்களை நம்பியுள்ளன அல்லது முரண்பட்ட அறிக்கையுடன் சவால்களை எதிர்கொள்கின்றன" என்று ODNI அறிக்கை கூறியது.

மேலும் படிக்க | DCGI: கொரோனா எமர்ஜென்சி இல்லாதபோது புதிய தடுப்பூசியை அங்கீகரித்தது ஏன்?

வுஹான் இன்ஸ்டிடியூட்டில் (Wuhan Institute (WIV)) கொரோனா வைரஸ்கள் குறித்து "விரிவான பணிகளை" மேற்கொண்டிருந்தாலும், வெடிப்பை ஏற்படுத்தியதாக நிரூபிக்கும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

"WIV இன் தொற்றுநோய்க்கு முந்தைய ஆராய்ச்சியில், SARS-CoV-2 அல்லது நெருங்கிய முன்னோடி ஆகியவை அடங்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் எங்களிடம் இல்லை, அல்லது கோவிட் நோயை ஏற்படுத்தக்கூடிய தொற்றுநோய்க்கு முன்னர் WIV பணியாளர்கள், சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது என்பதற்கான எந்த நேரடி ஆதாரமும் இல்லை" என்று அறிக்கை கூறியது.

சுதந்திரமான விமர்சனங்களை சீனா தடுக்கிறது 
கொரோனா வைரஸின் தோற்றம் பற்றிய கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சட்டமியற்றுபவர்கள் உளவுத்துறை அதிகாரிகளைக் கேட்டுள்ளனர். எவ்வாறாயினும், சுயாதீன மதிப்பாய்வுகளில் சீனா உருவாக்கிய அதிகாரப்பூர்வத் தடையால் தொற்றுநோயின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்று அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்கின்றனர்.

மேலும் படிக்க | கொரொனாவுக்கு எண்ட் கார்டு போடுவது எப்போது? சுகாதார அமைச்சகத்தின் கொரோனா அப்டேட்

தொற்றுநோயின் தோற்றம் குறித்து அமெரிக்க உளவுத்துறையின் இந்த அறிக்கை, அந்நாட்டு எம்.பிக்கள் முழுமையான விளக்கம் கோரிய மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளிவந்தது.

சில சட்டமியற்றுபவர்கள் வுஹான் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆதாய-செயல்பாட்டு மரபியல் பொறியியல் ஆராய்ச்சியில் (gain-of-function genetic engineering research) இருந்து இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்றும் அதற்கான ஆதாரங்கள் பெய்ஜிங்கால் மறைக்கப்பட்டுள்ளன என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மார்ச் மாதத்தில் எட்டப்பட்ட முடிவை மீண்டும் வலியுறுத்தும் வகையில், ODNI அறிக்கையானது, CIA, FBI மற்றும் NSA ஆகியவற்றை உள்ளடக்கிய "கிட்டத்தட்ட அனைத்து" அமைப்புகளும் கொரோனா வைரஸ் மரபணு ரீதியாக வடிவமைக்கப்படவில்லை என்று மதிப்பிட்டுள்ளன.

கோவிட்-19 உயிரி ஆயுதமாக உருவாக்கப்படவில்லையா?
"பொது சுகாதாரத் தேவைகளுக்காக" மக்கள் விடுதலை இராணுவம் (People's Liberation Army (PLA) ) உடன் இணைந்து, நோய்க்கிருமி ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசி உருவாக்கம் தொடர்பான ஆராய்ச்சியை வுஹான் ஆய்வகம் நடத்தியது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஆராய்ச்சியில் கொரோனா வைரஸ்களின் பயன்பாடு "SARS-CoV-2 ஐ உருவாக்குவதற்கு வழிவகுத்தது என்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு" என்று அறிக்கை கூறுகிறது. PLA வால் உயிர் ஆயுதமாக (bio-weapon) வைரஸ் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளையும் அறிக்கை கடுமையாக நிராகரித்தது.

முன்னதாக, கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த  உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா மேற்கொண்ட கூட்டு ஆய்வில், கொரோனா வைரஸ் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு மற்றொரு விலங்கு வழியாக பரவுவது பெரும்பாலும் சாத்தியமானதே என்றும், ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிவதற்கான சாத்தியங்கள் அதிகமில்லை என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதால், ஷேன் வார்னே இறந்தாரா? தொடரும் சர்ச்சை! உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News