இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் செல்லும் நிலையில், கிரீன கார்டுக்கு அப்ளை செய்யும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், கிரீன் கார்டுகளுக்கு அப்ளை செய்வது தொடர்பான விதிமுறைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் வேலை செய்வதற்கும், கிரீன் கார்டு அப்ளை செய்ய காத்திருப்பவர்களுக்கும், கிரீன் கார்டு அப்ளை செய்து காத்திருப்பவர்களுக்கும் ஆன, கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பிடன் நிர்வாகம் விதிகளைத் தளர்த்தியுள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள்
வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்திற்கான (EAD) ஆரம்ப மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கான தகுதி அளவுகோல்கள் தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வழங்கிய வழிகாட்டுதல்கள் மூலம் விசா விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வல்லுநர்கள் கிரீன் கார்டு அல்லது நிரந்தர குடியிருப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீன் கார்டு - நிரந்தர வதிவிட சிறப்புரிமை
'கிரீன் கார்டு' அதிகாரப்பூர்வமாக உள்ளூர் நிரந்திர குடியிருப்பு அட்டை என்று அழைக்கப்படுகிறது. இது அமெரிக்காவிற்கு வரும் புலம்பெயர்ந்தோருக்கு, நிரந்தர வதிவிட சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான சான்றாக வழங்கப்படும் ஆவணமாகும். கிரீன் கார்டை நாம் நிரந்தர குடியுரிமை அட்டை எனப் புரிந்து கொள்ளலாம். அதாவது வெளிநாடுகளில் இருந்து வருவோர் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கலாம் என்பதையே கிரீன் கார்டு குறிக்கிறது.
மேலும் படிக்க | மனிதர்களின் இடத்தை நிரப்பும் செயற்கை நுண்ணறிவு! விமானத்தை இயக்க AI தொழில்நுட்பம்
அமெரிக்க குடிவரவு சட்டம்
அமெரிக்க குடிவரவு சட்டப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.40 லட்சம் பேருக்கு கிரீன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கிரீன் கார்டுகளில் அதிகபட்சம் 7% மட்டுமே குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும். அதாவது 100 கார்டுகளை வழங்குகிறார்கள் என்றால் ஒரே நாட்டை சேர்ந்த 7 பேருக்கு மட்டுமே இந்த உரிமை கிடைக்கும். அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய ஒரு சமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விதியை அமெரிக்கா பின்பற்றுகிறது. அமெரிக்கா வந்த உடனேயே ஒருவரால் கிரீன் கார்டிற்கு நேரடியாக அப்ளை செய்ய முடியாது. இந்த விண்ணப்பத்திற்கு அப்ளை செய்ய பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அந்த அனைத்து நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே கிரீன் கார்டிற்கு அப்ளை செய்ய முடியும்.
நடவடிக்கையை பாராட்டிய FIDS
இந்தியா மற்றும் இந்திய புலம்பெயர் ஆய்வுகள் அறக்கட்டளை (FIIDS) USCIS போன்ற ஒரு நடவடிக்கையை எடுத்ததற்காக பாராட்டியுள்ளது. FIDS படி, இந்த நடவடிக்கை அதிக எண்ணிக்கையிலான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவும்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்
பிரதமர் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்கா செல்கிறார். ஜூன் 22-ம் தேதி மோடிக்கு அரசு விருந்து அளிக்கிறார். இதன் போது ஜூன் 22-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தில் ஒரு பகுதியாக வரும் ஜூன் 22ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்திலும் உரையாற்ற உள்ளார். ஜூன் 22-ம் தேதி மோடிக்கு, அரசு குறை விருந்தும் அளிக்கப்படும். இந்த பயணத்தில் அவர் பல முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க | AI இறந்தவர்களை மீண்டும் ’சிந்திக்க’ உயிர்ப்பிக்கும் செயற்கை நுண்ணறிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ