அமெரிக்காவில் அதிகரிக்கும் கார் திருட்டு... என்னது டிக்டாக் தான் காரணமா?

US Car Theft: தற்போது கவலைக்கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவில் கார் திருட்டு அதிகரித்துள்ளது. இதன் அதிர்ச்சி பின்னணியை அறிந்தால் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 8, 2023, 03:32 PM IST
  • இந்த ஆண்டு கார் திருட்டுகளில் கிட்டத்தட்ட 19% அதிகரித்துள்ளது.
  • இந்தாண்டு சுமார் 10 ஆயிரத்து 600 கார்கள் திருடப்பட்டுள்ளன.
  • இதற்கு TikTok வீடியோ தான் காரணம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் கார் திருட்டு... என்னது டிக்டாக் தான் காரணமா? title=

US Car Theft: அமெரிக்காவின் பல பகுதிகளில் கார் திருட்டு என்பது தற்போது குறிப்பிடத்தக்க பிரச்சனையாக உள்ளது. மேலும் இது சட்ட அமலாக்கத்துறையினருக்கும் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு தொடர்ந்து கவலை அளிக்கிறது. கடந்த காலத்தில், கார் திருட்டுக்குப் பின்னால் நிதிக் காரணங்களே முதன்மைக் காரணமாகக் காணப்பட்டன. 

இருப்பினும், நியூயார்க் காவல் துறையின் சமீபத்திய அறிக்கை, ஒரு வைரலான TikTok சேலஞ் தான் இப்போது கியா மற்றும் ஹூண்டாய் வாகனங்களை கடத்தப்படுவதற்கு மூலக்காரணமாக உள்ளது. இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு கவலைக்குரிய போக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்த கவலைக்குரிய போக்கு இந்த ஆண்டு கார் திருட்டுகளில் கிட்டத்தட்ட 19% அதிகரித்துள்ளதாக காட்டுகிறது.

போலீஸ் கமிஷனர் எட்வர்ட் கபான் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, 'இரட்டை இலக்க அதிகரிப்பை நாங்கள் கண்டுள்ளோம். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது' என்றார். போலீசாரின் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஐந்து நகரங்களில் மொத்தம் சுமார் 10 ஆயிரத்து 600 கார்கள் திருடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.

மேலும் படிக்க | வட கொரியாவின் முதல் 'தந்திரோபாய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்' அறிமுகமானது

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு இதே மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் கார் திருட்டுகள் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கார் திருடப்பட்ட ஒருவரை இங்கு பலருக்குத் தெரியும்.

ஐந்தில் ஒரு பங்கு திருட்டுகளுக்கு கியா மற்றும் ஹூண்டாய் மாடல்களை எவ்வாறு திருடுவது என்பதைக் காட்டும் டிக்டோக் வீடியோக்கள் தான் காரணம் என அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பல வீடியோக்கள் சாவி இல்லாமல் ஒரு காரை எவ்வாறு ஸ்டார்ட் செய்வது என்பது குறித்த படிப்படியான வழிமுறைகளை வழங்குகின்றன.

இந்த கார் திருட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் பாதி பேர் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருடப்படும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க ஒவ்வொரு பகுதியிலும் தனி ரோந்து காரை போலீசார் நியமிப்பார்கள். இந்த கார் திருட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் பாதி பேர் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய காப்பீடு க்ரைம் பீராவின் (NICB) தலைவரும், சிஇஓவுமான,"ஒவ்வொரு 32 வினாடிக்கும் தோராயமாக ஒரு மோட்டார் வாகனம் திருடப்படுகிறது, இது கடந்த ஆண்டு 1 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் திருடப்பட்டது" என தெரிவித்திருந்தார். அவரது அமைப்பின் மிகவும் திருடப்பட்ட வாகனங்களின் பட்டியலையும் அளித்தார்..

2022ஆம் ஆண்டில் முழு அளவிலான செவ்ரோலெட் மற்றும் ஃபோர்டு பிக்கப் டிரக்குகள் அடிக்கடி திருடப்பட்ட வாகனங்களாக இருந்தன, அதைத் தொடர்ந்து ஹோண்டா சிவிக் மற்றும் ஹோண்டா அக்கார்டு ஆகியவை NICB தரவு காட்டுகிறது. டொயோட்டா கேம்ரி, ஜிஎம்சி முழு அளவிலான பிக்கப்கள் மற்றும் ஹோண்டா சிஆர்-வி ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்ததுடன், பட்டியலில் அடுத்த மூன்று கார்களில் ஹூண்டாய் மற்றும் கியா மாடல்கள் உள்ளன.

மேலும் படிக்க | கிரீன் கார்டு வாங்குவதற்கு முன்னாடியே செத்துடுவாங்களா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News