உக்ரைனுக்கு செல்லத் தயார்...ஜோ பைடன் அறிவிப்பு

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு செல்லத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 15, 2022, 04:16 PM IST
  • உக்ரைனுக்கு செல்லத் தயார்
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
  • விரைவில் உக்ரைன் செல்ல வாய்ப்பு
உக்ரைனுக்கு செல்லத் தயார்...ஜோ பைடன் அறிவிப்பு title=

உக்ரைன் மீது ரஷ்யா 51-வது நாளாக தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் உதவி வரும் நிலையில், மரியுபோல் நகரில் உக்ரைனின் 36-வது படைப்பிரிவை சேர்ந்த 1,062 வீரர்கள் தங்கள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், மரியுபோலில் தாக்குதல் தொடர்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | உக்ரைக்கு $800 மில்லியன் இராணுவ உதவி; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு

நேற்று முன் தினம் அமெரிக்கா உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அறிவித்தது. ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு ரேடார்கள், கவச வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி புரியும் எனவும், அதிபர் ஜெலென்ஸ்கிக்கு உறுதியளித்தபடி, சுதந்திரத்திற்கான போராட்டத்தில் துணிச்சலான உக்ரேனிய மக்களுடன் அமெரிக்க மக்கள் தொடர்ந்து நிற்பார்கள் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில் உக்ரைனுக்கு உயர் அதிகாரிகளை அனுப்புவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிடு ஆஸ்டின் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் உக்ரைனுக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாக யூகிக்கப்பட்டது. தற்போது, தானே உக்ரைனுக்கு நேரில் செல்லத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த 9-ம் தேதியன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டதோடு, அதிபர் ஜெலன்ஸ்கியோடு ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | உக்ரைனுக்கு சென்ற பிரிட்டன் பிரதமர்...அதிபர் செலன்ஸ்கியுடன் ஆலோசனை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News