கதையல்ல நிஜம்... ஏழை காதலனுக்காக ₹ 2000 கோடியை உதறி விட்டு வந்த காதலி...!

பொருளை தேடி அலையும் இந்த உலகில், வாரிசாக சொத்துக்களைப் பெறுவதற்கும், சம்பாதிப்பதற்கும் மக்கள் எந்த நிலைக்கு இறங்க தயங்காமல், பணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கும் போது, ஏஞ்சலின் பிரான்சிஸ் கூவின் உண்மையான அன்பு மக்களின் இதயங்களை வென்றது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 15, 2023, 11:01 AM IST
  • திருமணத்திற்கு பிறகு இருவரும் குடும்பத்தை விட்டு ஒதுங்கி உள்ளனர்.
  • பிரான்சிஸ் ஒருமுறை தனது பெற்றோரை சந்திக்க வேண்டியிருந்தது.
  • ஏஞ்சலின் பிரான்சிஸ்-ன் பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர்.
கதையல்ல நிஜம்... ஏழை காதலனுக்காக ₹ 2000 கோடியை உதறி விட்டு வந்த காதலி...! title=

Viral Love Story: ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளம் பெண் ஒரு எளிய மனிதனைக் காதலிக்கும் கதையை நாம் திரப்படங்களில் அதிகம் கேட்டிருப்போம்... பார்த்திருப்போம். ஆனால், இங்கே குறிப்பிட்டுள்ள சம்பவம் கதையல்ல நிஜம். பணக்கார தொழில் அதிபர் குடும்பத்தில் பிறந்த பெண் இளவரசி போல் வளர்க்கப்பட்ட நிலையில், அவர் தனது ராஜ வாழ்க்கையை ஏழை காதலனுக்காக துறக்க தயாராகி விட்டார். தனது பெற்றோர் மறுத்த போதிலும், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக ஆகி விட்டார். மேலும், ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள மூதாதையர் சொத்து வேண்டுமா அல்லது காதல் திருமணம் வேண்டுமா என தேர்வு செய்யுமாறு பெற்றோர் கேட்ட போது, தனது  ஏழை காதலனை மணந்த வாழும் வாழ்க்கையை தேர்வு செய்துள்ளார். காதலனுக்காக அனைத்தையும் துறந்து வீட்டை விட்டு வெளியேறி தனக்குப் பிடித்தமான வாழ்க்கையைத் தொடரும் மலேசியத் தொழில் அதிபரின் மகள் தான் அந்த புரட்சிப் பெண்.

ஏழையை காதலித்த பணக்கார பெண்

மலேசியாவைச் சேர்ந்த ஏஞ்சலின் பிரான்சிஸ் கூ (Angeline Francis Khoo), பிரபல தொழிலதிபர் கூ கே பெங் (Khoo Kay Peng) மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய் (Pauline Chai)ஆகியோரின் மகள் ஆவார். ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் படிக்கும் போது, ஜெடிடியா பிரான்சிஸ் என்ற நண்பரை காதலித்தார். திருமணத்துக்கு தயாராக இருந்த அவர், இது குறித்து பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவர்கள் கடுமையாக மறுத்து விட்டனர். நிதி ரீதியாக, இரண்டு குடும்பங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது தான் அதற்கு காரணம். பணக்கார குடும்பத்தை சேர்ந்த தனது பெண்ணை, ஒரு ஏழைக்கு தனது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க அந்த பெற்றோர் விரும்பவில்லை. கடைசியில் தன் காதலனை மணம் செய்து கொண்டு அவனுடன் செட்டில் ஆக முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினாள் ஏஞ்சலின் பிரான்சிஸ் கூ. அவர் 2008 இல் திருமணம் செய்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். 2,000 கோடி பரம்பரை சொத்தை விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் காதல் கதை

திருமணத்திற்கு பிறகு இருவரும் குடும்பத்தை விட்டு ஒதுங்கி உள்ளனர். இருப்பினும், பிரான்சிஸ் ஒருமுறை தனது பெற்றோரை சந்திக்க வேண்டியிருந்தது. காரணம் அவளுடைய பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர். பிரான்சிஸ் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்குச் சென்றார், மேலும் ஏஞ்சலின் பிரான்சிஸ் கூ தனது தாயின் குடும்பத்திற்குச் செய்த சேவைகளுக்காகப் புகழ்ந்தார். ஆனால் அவர் தனது தந்தையை விமர்சித்தார். பெற்றோர் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். சுவாரஸ்யமாக, அவரது காதல் கதை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை காதல் ஜெயித்தது என கொண்டாடும் நெட்டிசன்கள்

பொருளை தேடி அலையும் இந்த உலகில், வாரிசாக சொத்துக்களைப் பெறுவதற்கும், சம்பாதிப்பதற்கும் மக்கள் எந்த நிலைக்கு இறங்க தயங்காமல், பணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கும் போது, ஏஞ்சலின் பிரான்சிஸ் கூவின் உண்மையான அன்பு மக்களின் இதயங்களை வென்றது. அவரது உண்மையான காதலை சமூக வலைதளவாசிகள் மிகவும் பாராட்டி வருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News