உயிருடன் புதைத்த கணவர் : ஆப்பிள் வாட்ச் மூலம் போலீஸுக்குத் தகவலளித்த பெண்

அமெரிக்காவில் கணவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட பெண், ஆப்பிள் கைக்கடிகாரத்தின் உதவியால் தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Chithira Rekha | Last Updated : Oct 26, 2022, 05:21 PM IST
  • மனைவியை உயிருடன் புதைத்த கணவன்
  • ஆப்பிள் வாட்ச் மூலம் போலீஸுக்குத் தகவலளித்த பெண்
  • கணவரைக் கைது செய்த போலீஸ்
உயிருடன் புதைத்த கணவர் : ஆப்பிள் வாட்ச் மூலம் போலீஸுக்குத் தகவலளித்த பெண் title=

வாஷிங்டனை சேர்ந்த யங் சூக் ஆன் என்ற 42 வயது பெண்ணுக்கும், அவரது கணவர் சே கியோங் ஆனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில், ஜீவனாம்சம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

கடந்த 16-ம் தேதி ஜீவனாம்சம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது, சே கியோங், யங் சூக் ஆனை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அவரது வாய் மற்றும் கையால் டேப் ஒட்டிய அவர், அருகிலுள்ள காட்டுப்பகுதியில் உயிருடன் புதைக்க முயன்றுள்ளார். அப்போது தனது கையில் கட்டியிருந்த ஆப்பிள் கைக்கடிகாரம் மூலம், அவசர உதவி எண்ணான 911-க்கு போன் செய்துள்ளார்.

மேலும் படிக்க | பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு; பாம்பின் வயிற்றை கிழித்து உடலை மீட்ட உறவினர்கள்!

வாயில் டேப் ஒட்டியிருந்த படியால் அவரால் பேசமுடியாவிட்டாலும், சத்தம் மட்டும் கொடுத்துள்ளார். பின்னணியில் கேட்ட சப்தத்தைக் கொண்டு ஏதோ அசம்பாவிதம் நடந்ததை உணர்ந்த காவல்துறையினர், செல்போன் டவரை வைத்து யங் சூக் ஆனின் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால், அங்கு யங் சூக் ஆன் இல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் தனது கையில் இருந்த டேப்பை அறுத்த யங் சூக் ஆன், பின்னர் தன்னை மூடியிருந்த மண்ணை கைகளால் அகற்றி குழியில் இருந்து வெளியே வந்துள்ளார். அவர் முழுவதும் குழியில் இருந்து வெளியே வர சில மணி நேரங்கள் ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மிகவும் சிரமப்பட்டு காட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள வீட்டிற்கு சென்ற யங் சூக் ஆன், அங்கிருந்தவர்களின் உதவியுடன் காவல்துறையை அணுகியுள்ளார்.

அவரது புகாரின் பேரில் யங் சூக் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸார் தர்ஸ்டன் கவுண்டி சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க | உலகின் அழுக்கான மனிதன் மரணம்... இத்தனை வருஷமா குளிக்கலையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News