ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் தூரு பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் தூரு பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். அதிகாலை வரை நீடித்த இந்த துப்பாக்கிசூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.