காமன்வெல்த் விளையாட்டு 2018 கோலாகலமாக தொடங்கியது!!
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது.
21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தொடங்கி வைத்தார். அங்கு பல கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் கொடியை பிவி.சிந்து தாங்கி செல்கிறார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 218 இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 17 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 101 பதக்கங்களை வென்றது. இதுவே இந்தியா அதிக பதக்கங்களை வென்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகும்.
இதற்கு முன்பு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.