ராஜஸ்தானில் புழுதி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலத்தில் பகலில் வெயில் வாட்டியெடுத்து வரும் நிலையில், மாலையில் மிதமான வானிலை மாற்றத்துடன் இருந்து வந்துள்ளது. இன்று காலை திடீரென ராஜஸ்தான் மாநிலத்தில் புழுதி புயலால் ஏற்பட்டுள்ளது. 


பின்னர் நகரம் முழுவதும் புழுதி புயல் வீச தொடங்கி உள்ளது. புழுதிப்புயல் வீசுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புயல் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் இருள் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.


இந்நிலையில், ராஜஸ்தானில் புழுதி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக ANI-ன் படி தகவல் கிடைத்துள்ளது.  


புழுதி புயலால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால் அப்பகுதியில் மின் சேவை முடங்கியுள்ளது.