சனி நட்சத்திரப் பெயர்ச்சி குறிப்பிட்ட இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட பார்வை வரப்போகிறது. மேலும் இந்த மூன்று ராசிக்காரர்கள் எந்தவிஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் மற்றும் எந்த செயலில் கவனம் அதிகரிக்க வேண்டும் என்று முழுவதும் இங்குப் படித்துத் தெரிந்து கொள்ளவும்.
ஜோதிடத்தின் அடிப்படையில் வெவ்வேறு ராசிகளின் அறிகுறிகள் மற்றும் கிரகங்களின் இடம் மாற்றத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் வருவதாகக் கூறப்படுகிறது. நீங்கள் இந்த மூன்றில் ஒரு ராசிக்காரராக இருப்பவர்களா...அப்போ நிச்சயம் உங்கள் ஜாக்பாட் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
சனி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை இடம் மாற்றம் செய்கிறது. சனி 12 ராசிக்காரர்களின் முழு சுழற்சியை முடிக்க அதற்கு 30 ஆண்டுகள் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
கும்ப ராசிக்காரர்கள் சனி நட்சத்திரத்தின் பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் விஷயங்கள் நல்ல விதத்தில் கைகூடி வரும். பணத்தைச் சேமிப்பு செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அதிக கவனம் தேவை.
கும்ப ராசிக்காரர்கள் சனி நட்சத்திரத்தின் பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் விஷயங்கள் நல்ல விதத்தில் கைகூடி வரும். பணத்தைச் சேமிப்பு செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அதிக கவனம் தேவை.
இந்த கன்னி ராசிக்காரர்களுக்குச் சனி சேர்க்கையால் மிகுந்த நல்ல பலன்கள் உண்டாகவிருக்கிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். மகிழ்ச்சியான நேரத்தை உறவில் செலவிட்டால் அனைத்தும் சந்தோஷமாக மாறும் என்று சொல்லப்படுகிறது.
கன்னி ராசிக்காரர்கள் தொழில் தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயம் மற்றும் முன்னேற்றம் அடைவீர்கள். வேலை இடத்தில் பதவி உயர்வு கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
ரிஷபம்: ஜோதிடத்தில் ரிஷபம் ராசிக்காரர்கள் பற்றி என்னக் கூறுகிறது என்றால் சனி மற்றும் வியாழன் இரண்டு சேர்க்கையும் மிகவும் நல்ல பலன்களை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சேர்க்கையால் குடும்ப பிரச்சனைகள், சிக்கல்கள் மற்றும் தீராத மனக்கவலைகள் அனைத்தும் முழுவதுமாக விடைகொடுக்கும் நேரமாக மாறப்போகிறது என்று கூறுகின்றனர். மேலும் இவர்கள் எதிர்பார்க்காத பண வரவுகள் வரும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.