மைனர் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 26 பெற்றோர் கைது!
18 வயதுக்கு குறைந்த குழந்தைகளை வாகனம் ஓட்ட விட்ட 26 பெற்றோர்களை ஐதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
18 வயதுக்கு குறைந்த குழந்தைகளை வாகனம் ஓட்ட விட்ட 26 பெற்றோர்களை ஐதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
ஐதராபாத்தில் தொடர்ந்து விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனத்தினை இயக்கும் பட்சத்தில் அவரது பெற்றோர்களை கைது செய்யும் நடவடிக்கையினை ஐதராபாத் போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக நடைப்பெற்று வரும் இந்த நடவடிக்கையால் இதுவரை சுமார் 273 வழக்குகள் இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஐதராபாத்தின் குஷாய்குடா பகுதியில் 48 வயது முதியவரின் மீது கார் ஏற்றி கொன்றாதாக இரண்டு மைனர் சிறுவர்கள் பிடிப்பட்டனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐதராபாத் போக்குவரத்து காவல்துறை அதிகாரி அனில் குமார் தெரிவிக்கையில்,. வாரம் இரண்டுமுறை மைனர் குழந்தை போக்குவரத்து நிகழ்கிறதாக என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரோந்துப் பணியில் சிக்கும் சிறார்களின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. மீண்டும் தொடரும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2107-ஆம் ஆண்டு மட்டும் ஏற்பட்டு சாலை விபத்துகளில் 30% விபத்துக்கள் மைனர் குழந்தைகளால் நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.