டெல்லி சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... தேதியை அறிவித்த தேர்தல் அறிவிப்பு

Delhi Assembly Election 2025 Date: டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆகியவை பிப்.5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 7, 2025, 03:47 PM IST
  • ஜன.10ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
  • ஜன.17ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
  • பிப்.3ஆம் தேதி வரை பிரச்சாரம் இருக்கும்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... தேதியை அறிவித்த தேர்தல் அறிவிப்பு title=

Delhi Assembly Election 2025 Date: டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்.5ஆம் தேதி நடைபெறும் என டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது தலைமை தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் அறிவித்துள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலும் பிப். 5ஆம் தேதி நடைபெறுகிறது. பிப்.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை அறிவிப்பு

மேலும், வரும் ஜன. 10ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஜன. 17 ஆம் தேதி முதல் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வேட்புமனு பரிசீலனை ஜன.18ஆம் தேதி அன்று நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற ஜன.20ஆம் தேதி கடைசி நாளாகும். பிப். 5ஆம் தேதி நடைபெறும் நிலையில், பிப். 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2025

டெல்லிக்கு இது 8ஆவது சட்டப்பேரவை தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் 1.55 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன, அவற்றில் 12 தனித்தொகுதிகள் ஆகும். மொத்தம் 13,033 வாக்குச் சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தனது முழு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. மேலும், ஆம் ஆத்மி கட்சி தனித்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பாஜகவும் இந்த தேர்தலில் வெற்றிபெற தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

மேலும் படிக்க | பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

டெல்லியில் இந்த தேர்தலில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். வாக்களிக்கும் அனுபவத்தை சீராக்குவதற்கு தேர்தல் ஆணையம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குச் சாவடிகளுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025

மத்திய பட்ஜெட்டை வரும் பிப்.1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். எனவே, இந்த பட்ஜெட்டில் டெல்லிக்கு என சிறப்பு அறிவிப்புகள் ஏதும் இடம்பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்போடு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் தொகுதி மற்றும் தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதி ஆகியவைக்கும் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான கட்டத்தில் தமிழக அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தற்போது இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 நாள்களுக்கும் மேலாக பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டி உள்ளது. குறிப்பாக, தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருப்பதால் தற்போதைய திமுக அரசு இந்த இடைத்தேர்தலை மிக முக்கியமான ஒன்றாக கருதும். எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக போன்ற கட்சிகளும் இதில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | தமிழக அரசு மிக தவறான பாதையில் செல்கிறது - தமிழிசை சௌந்தர்ராஜன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News