5.1 ரிக்டர் அளவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் அதிர்வு ஏற்பட்டது. 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேறி சாலைக்கு வந்தனர். பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்பட வில்லை.
இதே நாளில் கடந்த ஏப்ரல் மாதம் (9-ம் தேதி) ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதனால் பொது மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கடந்த 6 ஆம் தேதி அமெரிக்காவின் ஹவாய் தீவில் எரிமலை சீற்றம் ஏற்பட்டதால், நிலநடுக்கமும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியது என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஹவாய் தீவை சுற்றி உள்ள மக்கள் வெளியற்றப்பட்டனர்.