ஜிடிபி 5.6%-ல் இருந்து 7.7 சதவிகிதமாக உயர்வு!!
2017-18 ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.6%-ல் இருந்து 7.7%ஆக உயர்ந்துள்ளது!!
2017-18 ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.6%-ல் இருந்து 7.7%ஆக உயர்ந்துள்ளது!!
2017-18 ஆம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் எதிர்பார்க்கப்பட்ட அளவினைக்காட்டிலும் கூடுதலான உள்நாட்டு உற்பத்தியைக் கடந்து, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக சீனாவை வீழ்த்தியுள்ளது இந்தியா.
2017-ம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் சீனா 6.8 சதவீதம் வரையிலான ஜிடிபி வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியா இக்காலாண்டில் 6.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தால் 2016-ல் இழந்த உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக சக்தியாக மீண்டும் வர முடியும் என்று கூறப்பட்ட நிலையில் 7.2 சதவீத வளர்ச்சியுடன் சீனாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தியா.
கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5.7% ஆகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 5.6% ஆகவும் இருந்த ஜிடிபி விகிதம் தொடர்ந்து 3-வது காலாண்டில் அதிகரித்தது. இதையடுத்து, 2017-18 ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.6%-ல் இருந்து 7.7% ஆக உயர்ந்துள்ளது!!