சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய நீதிபதிகள் 7 பேர் பதவியேற்று வருகின்றனர்!
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய நீதிபதிகள் 7 பேர் பதவியேற்று வருகின்றனர்!
நாடு முழுவதும் உள்ள பல உயர் நீதிமன்றங்களில், நீதிபதிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 56 நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், அது அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1-ம் தேதி 7 புதிய நீதிபதிகளை நியமிக்க வழங்கப்பட்ட பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, நிர்மல்குமார், ஆஷா, சுப்பிரமணிய பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன், இளந்திரையன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்தனர்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்க பட்ட புதிய 7 நீதிபதிகளும் இன்று பதவியேற்று வருகின்றனர்!