பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல். மேலும்  தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எனவும் கூறியுள்ளார்.


தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும். இவற்றை, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in. என்ற இணையதள முகவரிகளில் பார்க்கலாம். 


தேர்வு எழுதியோர், தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வெளியாகும்.


தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வரும்.மாணவர்கள் வரும், 21ம் தேதி பிற்பகல் முதல், தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம். 


மேலும்,www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், மாணவர்கள், தேர்வர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.