Mutual Fund SIP Investment: இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையின் மியூச்சுல் ஃபண்ட்டில் (Mutual Funds) SIP மூலம் முதலீடு செய்வது இப்போது பலரிடம் வழக்கமாக உள்ளது. இதன்மூலம், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு என உங்களுக்கு ஏற்ற கால இடைவெளியில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். இது பங்குச் சந்தையில் தொடர்பில் இருந்தாலும், பலருக்கும் பரீட்சையமான ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில், பங்குச்சந்தையில் ஒரு பங்கில் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் இதில் ரிஸ்க் குறைவு என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.
இதில் 500 ரூபாய் முதல் முதலீடு செய்துகொள்ளலாம். ஆனால், இதில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் மட்டும் அதிக பலன்கள் கிடைக்கும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட காலம் முதலீடு செய்யும்போது உங்கள் முதலீட்டுக்கு கூட்டு வட்டி கிடைக்கும். இதனால், பெரிய லாபம் கிடைக்கும். இதன்மூலம், நீங்கள் ஒரு கட்டத்தில் கோடீஸ்வரர் கூட ஆகலாம். அதாவது, மாதாமாதம் 1000 ரூபாய் மட்டும் முதலீடு செய்தே நீங்கள் கோடிகளை புரட்டலாம். அதற்கென ஒரு பார்முலா இருக்கிறது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
கோடிகளை திரட்டும் பார்முலா
அதாவது அந்த பார்முலாவை 12x30x12 என்றழைப்பார்கள். இந்த பார்முலாவை SIP மூலம் செயல்படுத்தினால் உங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். முதலில், இந்த பார்முலா என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள், அதன்பின் இதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம். இந்த பார்முலாவில் உள்ள முதல் 12 என்பது ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டுத் தொகையில் 12% அளவு உயர்த்திக்கொண்டே வர வேண்டும்.
மேலும் படிக்க | Fixed Deposit of Interest Rates: டாப் வங்கிகளின் சமீபத்திய FD வட்டி விகிதங்கள்
அதாவது முதலில் 1000 ரூபாயை நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கினால் அடுத்தாண்டு அதில் 12% உயர்த்தி, 1120 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு அடுத்தாண்டு 12% உயர்த்தி 1,254 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டுத் தொகையை உயர்த்திக்கொண்டே போக வேண்டும். இதுதான் இந்த பார்முலாவில் காணப்படும் முதல் 12 குறிக்கிறது.
நீண்ட கால முதலீடு
அடுத்து 30 என்பது முதலீடு செய்ய வேண்டிய காலகட்டத்தை குறிக்கிறது. அடுத்துள்ள 12 என்பது ஒவ்வொரு ஆண்டும் உங்களது முதலீட்டுக்கு கிடைக்கும் 12% வருவாயை குறிக்கிறது. மொத்தம் 30 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும், அதே நேரத்தில் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டுத் தொகையில் 12% உயர்த்த வேண்டும், அதன்மூலம் உங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 12% வருவாய் கிடைக்கும் என்பதால் மொத்த முதலீட்டுக் காலத்திலேயே உங்கள் கைகளில் கோடி ரூபாய் இருக்கும் என்கின்றனர்.
இதில் நீங்கள் பெரிய தொகையை பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் இதில் தவறாமல் முதலீடு செய்து வர வேண்டும். அதுமட்டுமின்றி இந்த செய்யும் முதலீட்டை நீங்கள் நினைவிலேயே வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூட சொல்லலாம். இது குறுகிய கால முதலீடு இல்லை, நீண்ட கால முதலீடு செய்தால் மட்டுமே வருவாயை பெருக்க முடியும். குறுகிய கால தேவைகளுக்கு இதை சார்ந்து இருக்காதீர்கள் என்பதுதான் பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள் சொல்லும் முதல் விஷயம் ஆகும். தொடர்ந்து மூதலீடு செய்வது கடினமாக இருந்தாலும், அப்படிச் செய்தால் மட்டுமே இறுதியில் பெரிய தொகையை கையில் பெற முடியும்.
மொத்த தொகை எவ்வளவு கிடைக்கும்?
அதன்படி, இந்த பார்முலாவை பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் 12% உயர்த்திக்கொண்டே, 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மொத்தம் 28 லட்சத்து 95 ஆயிரத்து 992 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். மாதாமாதம் 12% கூட்டு வட்டி வருவாய் கிடைத்தால் அதில் 83 லட்சத்து 45 ஆயிரத்து 611 ரூபாய் கிடைக்கும். கையில் மொத்தமாக 1 கோடியே 12 லட்சத்து 41 ஆயிரத்து ரூபாய் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ளது கணிப்புகள் மட்டுமே, முதலீட்டுக்கான அறிவுரை கிடையாது என்பதை வாசகர்கள் நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும். இதனை பின்பற்றும் முன் நிதி ஆலோசகரை சந்தித்து தக்க ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | NPS Calculator: ரூ.50,000 மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி? இதோ முழுமையான கணக்கீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ