மன்னார்குடியில் அம்மா அணி என்னும் புதிய கட்சியை தொடங்கி உள்ளார் திவாகரன். இதற்கான அலுவலகத்தை திவாகரன் இன்று திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  மரணத்துக்குப் பின் அதிமுக மூன்றாக உடைந்தது. அதில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி அணிகள் இணைந்தன. முன்றாவது அணியான தினகரன் அணி தனித்தது. அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும், சசிகலா சகோதரர் திவாகரனுக்கும் இடையேயான அறிக்கைப் போர் வெளிவந்த நிலையில் மன்னார்குடியில் அம்மா அணி  என்ற கட்சியின் அலுவலகத்தினை திவாகரன் இன்று திறந்து வைத்துள்ளார்.


இது குறித்து திவாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தினகரன் இழுத்து மூடப்பட்ட அம்மா அணிக்கு புத்துயிர் அளிக்க நான் இந்தக் கட்சியை தொடங்கி உள்ளே. இந்த அணியில் இணைய விரும்புவர்கள் இணையலாம். விரைவில் மாவட்ட ரீதியாக நிர்வாகிகள் நியமிக்கப் படுவர். என தெரிவித்துள்ளார்.