சனிப்பெயர்ச்சி 2025: ஜோதிடத்தில் மிக முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி, 2025 மார்ச் 29ஆம் தேதி அன்று நிகழ உள்ளது. தற்போது கும்பத்தில் இருக்கும் சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்தும்.
சனிப்பெயர்ச்சி என்றாலே, பலருக்கு மனதில் பயமும் பதற்றமும் தொற்றிக் கொள்ளும். அதிலும் சனி ஏழரை நாட்டு சனி காலத்தில் இருப்பவர்கள், ஏழரை நாட்டு சனி தொடங்கும் நிலையில் இருப்பவர்கள் என அனைவரும் தங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்று நினைத்து அச்சம் கொள்வார்கள்.
சனிப்பெயர்ச்சி 2025: கர்ம வினைகளுக்கு ஏற்ற பலனை தரும் சனிபகவான் நீதி தேவன் என்று அழைக்கப்படுகிறார். சனீஸ்வரன் ஒரு மார்ச் 29ஆம் தேதி, பெயர்ச்சியாக உள்ள நிலையில் சில ராசிகளுக்கு நாட்டு சனி தொடங்க உள்ளது. 2025 மார்ச் 29ம் தேதி பெயர்ச்சியாகும் சனி பகவான் 2027ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.
ஏழரை நாட்டு சனி: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. அதாவது 5 ஆண்டுகளுக்கு இன்னும் ஏழரை நாட்டு சனி இருக்கும். கும்ப ராசியினருக்கு பாத சனி காலம், அதாவது இன்னும் 2 1/2 ஆண்டு ஏழரை சனி இருக்கும். மேஷ ராசியினருக்கு விரய சனி காலம். அதாவது 7 1/2 ஆண்டு ஏழரை சனி இருக்கும்.
ஏழரை நாட்டு சனி பாதிப்பு இருப்பவர்களுக்கு மன கஷ்டம், பணக்கஷ்டம் எல்லாம் ஏற்படும். உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். சனியைப் போல் கெடுப்பாறும் இல்லை சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை என்பார்கள். ஏனெனில் பிரச்சனைகளை தந்து சோதிக்கும், சனிபகவான் பின்னர் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும், வளங்களையும் அள்ளித் தருவார்.
ஏழரை நாட்டு சனியின் பாதிப்பில் இருந்து விடுபட பல்வேறு எளிய பரிகாரங்கள் உதவும். ஏழைகளுக்கு உணவளித்தல், காகம், கருநிற நாய், கருமை நிறப் பசு, எறும்புகள் ஆகியவற்றிற்கு உணவளிப்பதும், நிழலை நாட்டு சனி பாதிப்பிலிருந்து விலக உதவும். அதோடு வன்னி மர வழிபாடும், ஏழரைச் சனி பாதிப்பை நீக்கும்.
வன்னி மரத்தை வணங்கி வழிபட்டால், சனி பகவனானின் அருளை பரிமாணமாக பெறலாம். ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டவர்கள், வன்னி மர செடியை நட்டு வழிபடுவதால், மலைபோல் வந்த பிரச்சனைகள் அனைத்தும் பனி போல் நீங்கும். கைவைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறலாம். வன்னி மரச்செடியை பூஜிப்பதன் மூலம், சனிபகவானின் (Lord Shani) அருளை பரிபூரணமாக பெறலாம்.
ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரத்தின், இலை பூக்கள் என அனைத்து பாகங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தது. சிவாலயங்களில் தல விருட்சமாக இருக்கும் வன்னி மரத்தின் இலைகள் தங்கத்துக்கு நிகரானது என்று புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள், அனைத்தையும் துறந்து அஞ்ஞானவாசம் மேற்கொள்வதற்கு முன், தங்களிடமிருந்த ஆயுதங்கள், ஆடை அணிகலன்கள், ஆகிய அனைத்தையும் ஒரு துணியில் வைத்து கட்டி, வன்னி மரத்தடியில் வைத்து சென்றதாக கூறப்பட்டுள்ளது. வன்னி மரம் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்பதால், அவர்கள் வைத்த பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்ததாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.