மனிதனுக்கு அதிக பசி வந்துவிட்டால் கோவம் அதிகமாகும் என்று புதிய ஆய்வில் தகவல்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவருக்கு உணவு தேவைப்படுகையில் பசி (hungry) என்ற உணர்வு ஏற்படுகிறது. ஐப்போதாலமசு (Hypothalamus) எனும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் (Hormone) நுரையீரலில் உள்ள அறிமானிகளைக் குறி வைத்துச் சுரப்பதாலேயே அடிக்கடி விரும்பத்தகாத பசி உணர்வு ஏற்படுகிறது. 


ஆரோக்கியமான ஒருவர் சில வாரங்களுக்கு உணவு எடுத்துக் கொள்ளாமலேயே உயிர்வாழ முடியும். சாப்பிடாமல் விட்டு சில மணி நேரங்களுக்குப் பிறகே மிகவும் விரும்பத்தகாத ஒரு விதப் பசி உணர்வு ஏற்படுகிறது. பசி உணர்வு உணவு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே கட்டுப்படுத்தபடுகிறது.


பசி வந்ததும் கோவம் அதிகமாக வருவது ஒரு உணர்ச்சி என்று சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பசி வந்ததுட்டா.. நீ இப்படி தான் ஆகிடுவ என்று ஒரு விளம்பரம் உண்டு. பலரையும் இந்த விளம்பரம் கவர்ந்ததற்கு காரணம் அனைவருக்கும் அந்த விளம்பரத்தில் நேர்ந்தது போன்ற சம்பவம் நடந்திருக்கும். 


பசி வந்ததும் வழக்கத்தை விட கோபம் வரும். அதனை நாம் பலமுறை உணர்ந்திருக்க மாட்டோம். சிலரோ அந்த கோபத்தை அப்படியே வெளிப்படுத்திவிடுவர். தற்போது இதுகுறித்து லண்டனை சேர்ந்த நியூட்ரிஷியன் ஒருவர் ஆய்வு நடத்தி உள்ளார். அந்த ஆய்வின் முடிவில், ரத்தத்தில் சக்கரை அளவு குறையும் போது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள் மூளையை சென்றடையும்போது ஒருவர் கோப உணர்வை வெளிப்படுத்துகிறார் என்று கண்டறிந்துள்ளார். 


கடந்த ஜனவரி மாதம் இந்த உணர்வை குறிக்கும் ஹாங்கிரி (Hangry=Hungry+Angry) என்ற ஆங்கில சொல் ஆக்‌ஸ்வர்ட் அகராதியில் இணைக்கப்பட்டது.