ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அமைப்பின் தலைவர் ஜான் பெய்லி மீது 3 பெண்கள் தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் அளித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சினிமா துறையில் முக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் 2 வாரங்களுக்கு முன் நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.  


இந்த நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் (Academy of motion pictures) அமைப்பின் தலைவராக இருக்கும் ஜான் பெய்லி மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. 


75 வயதான ஜான் பெய்லி அமெரிக்கன் ஜிகோலோ த பிக் ஜில் கிரவுண்ட் ஹாக் டே உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்தான் ஆஸ்கர் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றார்.


தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக 3 பெண்கள், இவர் மீது புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. 


இதுகுறித்து அமைப்பு ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் நிர்வாக குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.


கடந்த சில மாதங்களுக்கு முன், டைரக்டர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பல நடிகைகள் பாலியல் புகார் கூறினர். இதில் ஏஞ்சலினா ஜோலி உட்பட முன்னணி நடிகைகளும் அடங்குவர். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் பல நடிகைகள் தங்களுடன் நடிக்கும் நடிகர்கள் மீது அவ்வப்போது பாலியல் புகார் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.