சேனலின் TRP அதிகரிக்க மட்டுமே ஸ்ரீ ரெட்டி நிகழ்ச்சி ஒளிபரப்புகின்றனர்!

TRP-க்காக ஸ்ரீ ரெட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக தெலுங்கு சேனல்களுக்கு நடிகர் பவன்கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார்!
தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. நடிகை ஸ்ரீ ரெட்டி ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்துவரும் பிரபலங்கள் மீது ஆதாரத்துடன் கூடிய குற்றங்களை இணையத்தில் தெரிவித்துவந்தார். இதனால், தெலுங்கு நடிகர் சங்கம் இவரை சங்கத்திலிருந்து நீக்கியது மட்டும் இன்றி படங்களில் நடிக்கவும் தடைவிதித்தது. இதனை எதிர்த்து நடிகை ஸ்ரீ ரெட்டி, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விதித்தது. பின்னர் தெலுங்கு நடிகர் சங்கம் அந்த தடையை நீக்கியது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், ''நடிகை ஸ்ரீரெட்டி தனது பிரச்சினை உண்மை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும், தொலைக்காட்சிகளில் இதுபோன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்துவது சரியல்ல, தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது'' என கூறியிருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஸ்ரீரெட்டி இதற்கு கண்டனம் தெரிவித்து திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு வருத்தப்படுகிறேன், அவரை சகோதரராக கருதியதற்கு என்னையே நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினார்.
அப்படிக் கூறியதுடன் நில்லாமல் காலிலிருந்த செருப்பைக் கழற்றி பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு செருப்பால் அடித்துக்கொள்கிறேன் என்று கன்னத்தில் செருப்பால் அடித்துக்கொண்டார், பின்னர் தவறான செய்கையையும் காண்பித்தார். செய்தியாளர்கள் முன்னிலையில் செருப்பால் அடித்துக்கொண்டதன் மூலம் மீண்டும் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனிடையே ஆந்திர பவர் ஸ்டார் பவன் கல்யாணை விமர்சித்ததால் அவரது ரசிகர்கள் டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்ரீ ரெட்டியை வறுத்தெடுத்து வருகின்றனர். ஸ்ரீ ரெட்டிக்கு ஏராளமான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தெலுங்கு டிவிக்கள் தொடர்ந்து ஸ்ரீரெட்டி சம்பந்தபட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
பவன்கல்யாண் தனது டுவிட்டரில் தெலுங்கு டிவிக்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்..!