திரைத்துறையினரின் 50 நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு பிறகு, அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் மெர்க்குரி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்குரி படத்தில், பிரபுதேவா மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.


மௌன படமாக உருவாகி உள்ள இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த போராட்டம் காரணமாக, ஏப்.20 ஆம் தேதி வெளியாகியானது.


நீண்ட நாட்கள் கழித்து, திரையரங்கில் புதிய தமிழ் படம் வெளியாவதால், ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்குப் படையெடுத்தனர்.


மெர்குரிபடம், தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் நாளில் சென்னையில் மட்டும் 31 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில், இந்த படத்தினை நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் உள்ள தியேட்டரில் பார்த்தார். பின்னர் அவர்  மெர்குரி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினர்.


அதன் அடிப்படையில், சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினிகாந்த் இல்லத்திற்கு மெர்குரி படக்குழுவினர் சென்றனர். அவர்களை நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பராடினார்.


மெர்குரி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுபுராஜ் ரஜினியை வைத்து அடுத்தப்படம் இயக்க இருக்கும் சூழ்நிலையில் ரஜினியை மெர்குரி படக்குழுவினர் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.