பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் கட்டாயப்படுத்தி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில், நடிகைகள் தங்கள் கர்ப்பினை விலையாக கொடுக்க வேண்டியுள்ளது. தெலுங்கு திரையுலகில் திறமையான நடிகைகள் இருந்த போதிலும், மும்பையில் இருந்து நடிகைகள் கொண்டுவரப் படுவது என பல முறைகேடுகள் நடைப்பெற்று வருகிறது.


ஒருவேலை வாய்ப்பு கிடைத்தாலும், அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் மிகவும குறைவுதான் எனவும் குற்றம் சாட்டினார். 


இந்த குற்றச்சாட்டிற்கு தெலுங்கு திரையுலகினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பெண் நடிகைகளும் இவரது குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.


இதை தொடர்ந்து, தெலுங்கு திரைப்பட துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாம் வேண்டும் என கோரியும் கடந்த ஏப்ரல் 7- ம் தேது இவர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!


இது குறித்த தகவலின் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் ஸ்ரீ ரெட்டியைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவரை சமாதானபடுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.


இந்நிலையில், முன்னதாக அவர் பேட்டி ஒன்றில் கூறிய செய்தி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


இது குறித்து அவர் கூறும் போது,  பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். 


அவர், தெலுங்கு திரையுலகை ஆளும் தயாரிப்பாளர் என்றும் ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். 


மேலும், என்னை ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்ற தயாரிப்பாளரின் மகனின் லீலை புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன். அது தான் என் பிரம்மாஸ்திரம் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.