Foods To Boost Immune In Monsoon Season: கடந்த சில மாதங்களாக நம் அனைவரையும் வாட்டி வதைத்து வந்த வெயில் காலம் தற்போது ஓய்ந்துவிட்டது. ஏப்ரல் - மே மாதம் இருக்க வேண்டிய கோடை வெயில் மார்ச் மாத தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டது எனலாம். வெயில் காலத்திற்கு என நம் உணவுமுறைகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் வெயிலின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் பெறுவோம். அதேபோல், ஒவ்வொரு காலத்திலும் அந்த தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ற பழக்கவழக்கங்களை மேற்கொள்வது என்பது அவசியமாகும்.
அந்த வகையில் தற்போது கோடை முடிந்து பருவமழை காலம் தொடங்கிவிட்டது. பருவமழை காலம் கடுமையான வெயிலில் இருந்து நமக்கு நிவாரணம் அளித்தாலும், இந்த காலகட்டத்தில் அதிக நோய்கள் பரவும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக இந்த பருவமழை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளாகதான் இருப்பார்கள். காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதும், வெப்பநிலையில் அடிக்கடி மாற்றம் வரும் என்பதால் பல்வேறு பேக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும். இதனால் சளி, காய்ச்சல் மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
அந்த வகையில் இந்த மழை காலத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை காக்க, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டியது அவசியமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாகும்பட்சத்தில் மழை காலத்தில் பரவும் நோய்களிடம் இருந்து குழந்தைகள் எளிதாக தற்காத்துக்கொள்ளலாம். இந்நிலையில், குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கத்தில் இந்த உணவுகளை சேர்ப்பதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கலாம். மழைக் காலத்தில் குழந்தைகளின் உடல்நிலையை காக்கும் இந்த 5 உணவுகளை இங்க காணலாம்.
மேலும் படிக்க | யூரிக் ஆசிட் பாடாய் படுத்துகிறதா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்கள்
அந்த 5 உணவுகள்
1. யோகர்ட்
யோகர்டில் காணப்படும் புரோபயோடிக் எனப்படும் நல்ல பேக்டீரியாக்கள் நமது குடலுக்கு நல்லது. இது உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். தொடர்ந்து யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சீராக இருக்கும், உடலின் இயற்கையான தற்காப்பும் சீராக இருக்கும். அதேபோல் சர்க்கரை சேர்த்த யோகர்ட்டை சாப்பிட வேண்டாம்.
2. பழங்கள்
லெமன் மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமிண் C உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலைத்தை வலுவாக்கும் முக்கிய ஊட்டச்சத்தாகும். வைட்டமிண் C வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். இது நோய்களுக்கு எதிராக சண்டையிடும் எனலாம். எனவே, குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸ்களை அருந்தும்படி அறிவுறுத்துங்கள். ஆரஞ்சு பழத்தை முழுதாகவும் சாப்பிடலாம்.
3. பாதாம்
வைட்டமிண் E பாதாமில் அதிகம் இருக்கிறது. இந்த ஆண்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவும். இதில் ஆரோக்கியமான கொழுப்பு, ஃபைபர், புரதம் ஆகியவை உள்ளது. நன்கு ஊறவைத்த கையளவு பாதாமை இந்த மழைக் காலத்தில் குழந்தைகளுக்கு கொடுத்து வருவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
4. தேனும், இஞ்சியும்...
இஞ்சியில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும், ஆண்டிஆக்ஸிடன்ட் பண்புகளும் அதிகம் உள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். இஞ்சியை தனியாக உண்பதை குழந்தைகளை ஏற்க மாட்டார்கள் என்பதால் அதனுடன் தேனை சேர்க்கலாம். தேனையும், இஞ்சியையும் கலந்து உண்ணும் போது அதில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் தன்மை இருக்கிறது. குழந்தைகளுக்கு தேன் கலந்த இஞ்சி டீ போட்டுக்கொடுக்கலாம். இல்லையெனில், உங்களின் உணவுகளில் இஞ்சியை சற்றே அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.
5. மஞ்சள்
இது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள குர்குமின் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை உடையது, ஆண்டிஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படும். குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சூப், பால் போன்ற உணவுகளில் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்ப்பது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | வயிற்றுப்போக்கை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ