உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ்மஹால்-னை பார்வையிட வரும் சுற்றுளா பயணிகளுக்கான சுற்றிப் பார்க்கும் நேரம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டிய தாஜ்மகால் உலக அளவில் பிரபலமானது. இந்தியர மட்டும் அல்லாமல் உலக முழுவதிலும் சுற்றுளா பயணிகள் வந்து தாஜ்மகாலினை பார்வையிட்டு வருகின்றனர்.


தாஜ்மஹாலை பார்வையிட தினமும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இந்நிலையில் தாஜ்மாகலினை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கான பார்வை நேரத்தினை 3 மணி நேரமகா குறைத்துள்ளது உத்திர பிரதேச அரசு. மேலும் இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தாஜ்மஹால்-னை காண வரும் பார்வையாளர்களுக்கான நுழைவு கட்டனத்தினையும் மாற்றி அமைத்துள்ளது.


அதன்படி விலைப்பட்டியல்...


  • Free entry:  15 வயதுக்கு உட்பட்டவர்கள்

  • Indian Visitors: Rs.40/- (Rs.30/- by ASI, Rs.10/- by ADA)

  • SAARC and BIMSTEC Visitors: Rs.530/- (Rs.30/- by ASI,  Rs.500.00 by ADA)

  • Other Foreign Visitors: 1000/- (Rs.500/- by ASI, Rs.500/- by ADA)


மேலும் இந்த அறிவிப்பின் படி மேற்கு நௌபாட்கான் பகுதியில் இருக்கும் அருங்காடசியம் ஆனது காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திரக்கப்படும் எனவும், வெள்ளிகிழமைகள் தோறும் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!