தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

81 வயதான இவர் தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்தவர். இவரது இறப்பு குறித்த தகவலினை அவரது  தனி உதவியாளர் தெரியபடுத்தியுள்ளார்.


தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியான இவர், கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வந்தார். 


நெல்சன் மண்டேலா, தனது 27 வருட சிறைவாசத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது அவருடன் கைகோர்த்து நடந்த வின்னி மண்டேலா புகைப்படம் அப்போதைய காலக்கட்டத்தில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக திகழ்ந்தது.


வின்னி மண்டேலாவின் இறப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை அவரது குடும்பத்தினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.