Live: அஸ்வின் ஓய்வு; டிராவான IND vs AUS காபா டெஸ்ட்... தமிழக வானிலை நிலவரம் - உடனடி அப்டேட்கள்

Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் என இன்றைய (டிச. 18) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 18, 2024, 12:13 PM IST
    TN Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து செய்திகளின் உடனடி அப்டேட்கள் இதோ...
Live Blog

Tamil Nadu Today Latest News Live Updates:நாடாளுமன்ற கூட்டத்தொடர் (Parliament News), தமிழ்நாடு வானிலை (TN Rains), இந்தியா - ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் (IND vs AUS Brisbane GabbaTest Day 5) உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்களை இங்கு விரிவாக காணலாம். உள்ளூர், மாநில, தேசிய, சினிமா, விளையாட்டு, பொருளாதாரம், அரசு திட்டங்கள், வைரல் உள்ளிட்ட அனைத்து வகை செய்திகளையும் இங்கு காணலாம். 

 

 

18 December, 2024

  • 11:39 AM

    பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்: சமநிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா

    பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடைசி நாளான இன்று இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2.1 மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. தற்போது 1-1 என்ற கணக்கில் தொடரில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. டிச.26ஆம் தேதி மெல்போர்னிலும் மற்றும் ஜன.3ஆம் தேதி சிட்னியிலும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. 

  • 09:37 AM

    இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு

    பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களுக்கு 89 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ் டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தார்.

    பிரிஸ்பேனில் வழக்கமாக மாலை 5.30 மணியளவிலேயே பொழுது சாயத் தொடங்கும். தற்போது இன்னும் 3 மணிநேரத்திற்கு மேலாக ஆட்டம் பாக்கி இருக்கிறது. இந்த நேரத்தில் இலக்கை இந்திய அணி அதிரடியாக துரத்துமா அல்லது டிராவை நோக்கி செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

Trending News