கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில் தற்போது அடுத்ததாகச் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சென்னையில் தற்போது ரூ.481.84 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் மானிய சிலிண்டரின் விலை ரூ.493.55 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.496.65 ஆகவும், மும்பையில் ரூ.491.31 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.