2ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை

2ஜி அலைவரிசை ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கனிமொழி, ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியது. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சைனி அறிவித்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
#2GScamVerdict: 2G வழக்கு இறுதி தீர்ப்பு!! குஷியில் திமுக ஆதரவாளர்கள்!
இதையடுத்து, திமுக ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில், தற்போது 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது. என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.