நியூயார்க் நகரத்தில், 1925 ஜூன் 8-ம் தேதி பார்பரா பியர்ஸாக புஷ் பிறந்தார். அவர் 1945-ம் ஆண்டில், ஜார்ஜ் புஷ்-ஷை திருமணம் செய்து கொண்டார். ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்-ஷிற்கு தற்போது 93 வயதாகிறது அவர் நீண்டகாலம் வாழ்ந்த அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெறுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பார்பராவின் மகன் ஜார்ஜ் புஷ் 2000ஆம் ஆண்டு அமெரிக்காவின் 43ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இருமுறை அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1989ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்த பார்பரா புஷ்ன் உடல்நலம், சிறிது நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில், இன்று காலை தீடிரென உயிரிழந்தார். இந்தத் தகவலை புஷ் குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக்ராத் உறுதிப்படுத்தியுள்ளார். 


பார்பராவின் இறுதிச் சடங்குகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.


Ailing Former First Lady of the UnitedStates Barbara Bush died at the age of 92 on Tuesday!


இந்த செய்தி குறித்து ஜார்ஜ் புஷ் கூறும்போது....!


"எனது அன்பு அம்மா தனது 92ஆவது வயதில் காலமானார். லாரா, பார்பரா, ஜென்னா மற்றும் நான் துக்கத்தில் இருக்கிறோம், ஆனால் எனது அம்மாவின் ஆன்மா அமைதியில் உள்ளது என்பதால் எங்களின் மனதும் அமைதியாக உள்ளது. பார்பரா புஷ் மிகச் சிறந்த முதல் குடிமகளாக இருந்தார். பிறரை போல் இல்லாமல் உத்வேகம், அன்பு மற்றும் கல்வியை மில்லியன் கணக்கானவர்களுக்கு வழங்கியவர்.


அவரின் கடைசி காலம் வரை அவர் எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். பார்பரா புஷ்ஷை தாயாக பெற்ற நான் அதிர்ஷ்டசாலி; எனது குடும்பம் அவரை இழந்து வாடுகிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி" என ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.