டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு விரைவில் நேரடி விமானச் சேவையை தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் தீர்மானித்தது. போயிங் 787-8 ரக விமானங்களை இந்தச் சேவைக்கு ஏர் இந்தியா விமானம் பயன்படுத்த திட்டமிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு நகரங்களுக்கு இடையேயான நேரடி விமானச்சேவை நேற்று முதல் துவங்கப்பட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த விமான சேவை நடைபெறுகிறது. 


சவூதி அரேபிய வான் எல்லை வழியாக விமானம் செல்வதன் மூலம் பயண நேரம் ஏறக்குறைய 2 மணி நேரம் வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஓமன், சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக இஸ்ரேல் செல்வதற்கு ஏர் இந்தியா விமானங்கள் 7-1/2 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். தற்போது, 5-1/2மணி நேரத்தில் டெல்லியில் இருந்து டெல் அவிவ் சென்றடையலாம் என தெரிகிறது. இந்த சேவையானது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் இயக்கப்பட உள்ளது.