ஏர்டெல் நிறுவனம் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஒரு சூப்பர் பட்ஜெட் இலவச ''லைவ் ஸ்ட்ரீமிங்'' சலுகையை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பயனர்களுக்கான புதிய திட்டங்களை வழங்கியுள்ளது.


இந்த இலவச வாய்ப்பின் மூலம், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரும் அனைத்து  ஐபிஎல் 2018 போட்டிகளையும் இலவசமாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.


இன்றுமுதல் தொடங்கி அடுத்த 51 நாட்களுக்கு நடக்கும்  ஐபிஎல் 2018 போட்டிகளை இலவசமாக காண, ஏர்டெல் நிறுவனம் இந்த இலவச சலுகையை அறிவித்துள்ளது.


முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ ஐபில் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்ய ரூ 251 மதிப்பில் 102 ஜிபி அளவிலான டேட்டாவை 51 நாட்கள் வழங்க திட்டமிட்டிருந்தது.


இருப்பினும், இந்த திட்டம் எப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது பற்றிய ​விவரங்களை ஜியோ இன்னும் அறிவிக்கவில்லை.


இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஒரு சூப்பர் பட்ஜெட் இலவச ''லைவ் ஸ்ட்ரீமிங்'' சலுகையை அறிவித்துள்ளது.


நிகழும் ஐபிஎல் போட்டிகளின் வரம்பற்ற இலவச ஸ்ட்ரீமிங்கை பெற, ஒருவர் வெறுமனே ஏர்டெல் டிவி பயன்பாட்டின் புதிய அப்டேடட் பதிப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும்


அப்டேட் செய்த பின்னர், ஏர்டெல் டிவி ஆப்பில் உள்நுழைய ஒரு பிரத்யேக கிரிக்கெட் பகுதியை காண்பீர்கள், அதன் வழியாக மேலே குறிப்பிட்டுள்ள இலவச சேவைகளை அணுகலாம். இந்த இலவச ஸ்ட்ரீமிங் சேவையை அனுபவிக்க, ஏர்டெல் டிவி பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பை நிறுவ வேண்டும் என்பது கட்டாயமாகும்.


இந்த ஆப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.