சீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் அக்ஷரா ஹாசன்!

நடிகர் கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா ஹாசன். இவர் ஷமிதாப் என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்தில் நடித்தார்.
நடிகர் கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா ஹாசன். இவர் ஷமிதாப் என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்தில் நடித்தார்.
இந்நிலையில் விவேகம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது நடிகை அக்ஷரா ஹாசன் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விக்ரம் தற்போது கவுதம்மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம்' மற்றும் ஹரி இயக்கத்தில் 'சாமி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களை அடுத்து அவர் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அக்ஷரா ஹாசன் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது வரை இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.