அட்சய திருதியான இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் இறைவனை பிராத்தனை செய்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஸ்வர்யம் தேடிவரும் அட்சய திருதியை நன்னாளில் மக்கள் அனைவரும் தங்கம் வாங்க, தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.


இந்த நாளில் தங்கம் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை!


அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.


இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.


சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.


இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் இறைவனை பிராத்தனை செய்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.


இந்நாளில் கொண்டாடத்தின் சிறப்பு அம்சங்கள்...!


அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்து இதிகாசப்படி, அட்சய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.


பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.


காசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் அட்சய திருதியை அன்றுதான்.


செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.