AL விஜய்-ன் `கரு` திரைப்படம் `தியா` என மாற்றம் - காரணம்?
AL விஜய் இயக்கத்தில் வெளிவரும் கரு திரைப்படத்தின் பெயர் தியா என மாற்றப்பட்டுள்ளது!
AL விஜய் இயக்கத்தில் வெளிவரும் கரு திரைப்படத்தின் பெயர் தியா என மாற்றப்பட்டுள்ளது!
‘வனமகன்’ திரைப்படத்திற்கு பிறகு AL விஜய் இயக்கத்தில் வெளிவரும் தமிழ் திரைப்படம் ‘கரு’. வரும் ஏப்ரல் 27-ஆம் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தற்போது 'தியா' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது!
நாயகிக்கு முக்கியத்துவமுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நாக செளரியா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா என பலர் நடித்துள்ளனர்.
லைகா புரடக்ஸன் தயாரிப்பில் வெளிவரும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
தனது பர்ஸ்ட்லுக் போஸ்டர் மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்த இப்படம் தற்போது காரணம் வெளியாகமல் பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதற்கான காரணம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.