IPL 2018 தொடரில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டதை அடுத்து, சன் ரைஸர் ஹைதராபாத் அணிக்காக அலேஸ் ஹால்ஸ் களம் காணுகின்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL-2018 கிரிக்கெட் போட்டிகளின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காணுகின்றன. பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் எதிர்வரும் நிலையில் IPL வீரர்களின் மீது எழும் சர்சைகளுக்கும் அளவில்லை.


முன்னதாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆட்டத்தின் போது பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்து பெரும பரபரப்பினை ஏற்படுத்தியது.


இந்த புகார் தொடர்பாக ஆஸ்திரேலியா வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் IPL தொடர்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து ஹைதராபாத் அணியின் கேப்டன் பொருப்பில் இருந்த டேவிட் வார்னர் நீக்கப்பட்டு அணியில் கேப்டனாக நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்ஸ் அணி தலைமை பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.


இந்நிலையில் தற்போது டேவிட் வார்னருக்கு பதிலாக அணியில் விளையாட, இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹால்ஸ் இடம்பெற்றுள்ளார். இவர் IPL 2018 ஏலத்தின் போது இவரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!