Live: கரையை கடந்த பெஞ்சல் புயல்... எங்கெல்லாம் அடுத்து மழைக்கு வாய்ப்பு? - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil Nadu Today Latest News Live Updates: பெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்ட பின்னர் தமிழ்நாட்டின் வானிலை நிலவரம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 1, 2024, 07:49 AM IST
    TN Latest News Live Updates: தமிழ்நாடு செய்திகள், வானிலை தகவல்கள் உள்ளிட்ட அனைத்து செய்திகளின் உடனடி அப்டேட் இதோ...
Live Blog

Tamil Nadu Today Latest News Live Updates: பெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்ட நிலையில், இனி சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வானிலை நிலவரம், ஆஸ்திரேலியாவின் கன்பெர்ராவில் Prime Mininster's XI அணியுடன் இந்திய அணி இன்று விளையாடும் பயிற்சி ஆட்டம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு காணலாம்.

 

1 December, 2024

  • 06:26 AM

    சென்னையில் மழைக்கு வாய்ப்பு

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு இன்று காலை 10 மணிவரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காரைக்கால் பகுதிகளில் மஞ்சஶள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
     

  • 05:53 AM

    ஆரஞ்ச் அலர்ட்

    அதேபோன்று, இன்று காலை 7 மணிவரை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. 

  • 05:52 AM

    ரெட் அலர்ட்

    இன்று காலை 7 மணி வரை சில மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கணித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் என 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளுக்கு இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

  • 05:46 AM

    எங்கு அதிகபட்ச மழை...?

    பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் 47.7 செ.மீ., மழையும், விழுப்புரத்தில் 49 செமீ மழையும் அதிகபட்சமாக பதிவாகி உள்ளது. 

  • 05:46 AM

    செயல்பட தொடங்கிய சென்னை விமான நிலையம்

    பெஞ்சல்‌ புயல்‌ காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும்‌ செயல்பட்டுக்கு வந்தது.

  • 05:44 AM

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    புயல்‌ கரையை கடந்தபோது மணிக்கு 90 கிலோ மீட்டர்‌. வேகத்தில்‌ பலத்த சூறைக்காற்று வீசியதாக வானிலை மையம்‌ தகவல்‌ தெரிவித்துள்ளது. பலத்த சூறைக்காற்றுடன்‌ கரையை கடந்த பெஞ்சல்‌ புயல்‌, அடுத்த 3 மணி நேரத்தில்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நள்ளிரவு 1.23 மணிக்கு அதன் X பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

  • 05:43 AM

    கரையை கடந்த பெஞ்சல் புயல்

    வங்கக்கடலில்‌ நிலவிய பெஞ்சல்‌ புயல்‌ நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 11.30 மணியளவில்‌ முழுமையாக கரையை கடந்தது. 10 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ நகர்ந்து வந்த புயல்‌ வட தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி இடையே கரையை கடந்தது. 

Trending News