அமலாபாலின் அழுகுரல் Instagram-புகைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல நடிகை அமலா பால் அழுகும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளிவந்து தற்போது வைரலாகி உள்ளது!
திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த பிறகு அமலா பால் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்கள் நடித்து பிரபலமாகி வருகிறார்.
இவர் தற்போது சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா உள்ளிட்டோருடன் சேர்ந்து திருட்டுப் பயலே 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து, இவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.
இந்நிலையில், இவர் தற்போது தான் அழுவது போல் ஒரு புகைப்படத்தை தன்னுடைய Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திடீரென்று உங்களுக்கு என்ன ஆனது என்று கமெண்ட் செய்து அதிர்ச்சி அடைத்து வருகின்றனர். தற்போது இந்த நிகழ்வு சமூக இணையதளங்களில் வெளிவந்து வைரலாகி உள்ளது.