நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கர் ஜெயந்தி முன்னிட்டு அசம்பாவிதச் சம்பவங்கள் தவிர்க்கும் விதமாக அனைத்து இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கையை விடுத்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 14 அன்று பதற்றம் ஏற்படக்கூடிய அனைத்து இடங்களிலும் அமைதியை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வன்முறை தொடர்பான சம்பவங்களை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


பொது சொத்துக்கள் மற்றும் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும், தேவையான இடங்களில் தடை உத்தரவுகளையும் முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளது. 


மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் தங்களது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமையை உறுதியுடன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களாக அம்பேத்கர்  சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை அம்பேத்கார் ஜெயந்தி முன்னிட்டு அசம்பாவிதச் சம்பவங்கள் தவிர்க்கும் விதமாக அனைத்து இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கையை விடுத்து உள்ளது.